ஆண்டவர் உனக்கு பதில் அளிக்காதபோது நீ என்ன செய்வாய்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, அப்போஸ்தலனாகிய பவுலைக் காண்போம், அவர் தன்னுடைய வேதனையைக் குறித்து ஆண்டவரிடத்தில் மூன்று ஜெபங்களை ஏறெடுத்தார். (வேதாகமத்தைப் பார்க்கவும், 2 கொரிந்தியர் 12: 7-10)
அவர் கொரிந்தியருக்கு எழுதின கடிதத்தில், “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.” என்று எழுதியது உனக்கு நினைவிருக்கிறதா? (2 கொரிந்தியர் 12: 8)
நான் கற்பனை செய்கிறபடி, அவர் முதன்முதலில் ஜெபம் செய்தபோது, தன்மீது வந்திருக்கிற இந்தப் பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபடப்போவதாக எண்ணி அவர் உறுதியாக இருந்தார்:
“ஆண்டவரே, நீர் எனக்கு வேண்டும் … இந்த நிலைமை என் அஸ்திபாரத்தையே அசைத்துப்போட்டது. தயவுசெய்து … இந்த வேதனையை என்னை விட்டு நீக்கி விடும். ஆமென்.”
ஆனாலும், அந்த முள் அங்கேயே இருந்தது. இருப்பினும் பவுல் பலமுள்ளவனாகி மனம் தளர்ந்து போகவில்லை. அவர் இரட்டத்தனையான விழிப்புடன் ஜெபத்தில் உறுதியாக இருந்தார்:
“ஆண்டவரே, இந்த முள்ளை என்னிடமிருந்து எடுத்துப்போடும்படி விண்ணப்பிக்க நான் மீண்டும் வருகிறேன். நான் உண்மையில் அதைப் பற்றி யோசித்தேன், அது என்னை ஊழியத்தில் ஊனமுற்றவனாக்குகிறது. நீர் இதை என்னிடமிருந்து நீக்கிவிட்டால், நான் இன்று செய்வதை விட, இன்னும் சிறப்பாக உமக்கு சேவை செய்ய முடியும்: நான் அநேக விதவைகளை சந்திக்க முடியும், அநேக மக்களுக்கு பயிற்சி அளிக்க முடியும், உம்முடைய திருச்சபைக்கு போதிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் அநேகக் கடிதங்களை எழுதவும் முடியும்! இந்த வேதனை என்னை விட்டுப்போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! ஆமென்.”
இன்னும் … முள் அப்படியே இருந்தது.
இந்த முறை, பவுல் தனது வேதனை நீங்குவதைக் காண ஆவலுடன் காணப்பட்டு, நிச்சயமாகவே, உபவாசம் மற்றும் ஜெபத்திற்கான நேரத்தை ஒதுக்கினார்:
“இயேசுவே, சிலுவையில் மரித்ததன் மூலம் எங்கள் வேதனையை நீர் ஏற்றுக்கொண்டதாக சொன்னீர், நானோ, இந்த முள்ளுடன் போராடுவதால் மிகவும் சோர்ந்துபோகிறேன். இறுதியாக நான் மீண்டும் ஒருமுறை உம்மிடம் கேட்கிறேன் … இந்த வலியை என்னிடமிருந்து எடுத்துப்போடும்படி நான் கெஞ்சுகிறேன் … தயவுசெய்து எடுத்துப்போடுவீராக! இல்லையெனில், என்னிடம் ஒரு வார்த்தையாகிலும் பேசுவீராக . ஆமென்.”
இன்று பவுலுடன் இணைந்து இன்னும் ஒரு ஜெபம் செய்வதற்காக உன்னை அழைக்கிறேன்.
“ஆம் … நான் பலவீனமாக இருக்கும்போது, நான் மிகவும் பின்தங்கி தாழ்ந்துபோயிருப்பதை உணரும்போது, இனியும் என்னால் அதைத் தாங்க முடியாது என்று நினைக்கும் போது, நான் அதை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது, நான் என் வாழ்வின் விளிம்பில் இருக்கும்போது, என்னால் இந்த ஏமாற்றத்தை இனியும் தாங்க முடியாதபோது, நான் மிகவும் பலவீனமாக இருக்கும்போது …இதோ, இந்தத் தருணத்தில்தான் இயேசுவே, உம்மால் நான் பலமாக இருக்கிறேன். நான் என் முள்ளை கைவிட்டு, என் ஏமாற்றத்தை உமது கரங்களில் விட்டுவிடுகிறேன். ஆமென்!”