தேவனால் மட்டுமே உன் இருதயத்தை ஆராய முடியும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனால் மட்டுமே உன் இருதயத்தை ஆராய முடியும்

“தேவனால் மட்டுமே உன் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்தவும் உன் வாழ்க்கையை மாற்றவும் முடியும்.”

“பரிசுத்தமாக” இருக்கவும் மேலும் அதிகமாக இயேசுவைப்போல மாறவும் என்ன செய்ய வேண்டும் என்று அநேக விசுவாசிகள் யோசித்துப் பார்ப்பதுண்டு. நீயும் அப்படித்தான் யோசிக்கிறாய் அல்லவா?

ஆண்டவர் உன்னை மாற்ற விரும்புவது என்பது ஒரு நல்ல விஷயமும் மேற்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான பயணமுமாகும். ஆனால் நீ மாற்றமடைவது எப்படி? உன் சொந்த பலத்தால் நீ அதை அடைய முடியுமா? யோவான் 17:17ல் இந்த விஷயத்தை வேதாகமம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.”

உன் சுயபலத்தைக்கொண்டு மட்டுமே நீ பரிசுத்தமாக முடியாது… உன் பரலோகப் பிதாவானவர் தம்முடைய வார்த்தை மற்றும் ஆவியின் மூலமாக உனக்குள் இதைச் செய்கிறார்!

பின்வருவனவற்றைச் செய்யும்படி நான் உன்னை அழைக்கிறேன்:

  1. உன் இருதயத்தை ஆராய்ந்து அறியும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேள்
  2. சத்தியமும் உன் தினசரி வழிகாட்டியுமாய் இருக்கிற அவருடைய வார்த்தையை வாசித்து தியானி
  3. பிதாவின் குரலுக்குத் தொடர்ந்து செவிகொடு

தேவன் ஒருவரே உன் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்தி உன் வாழ்க்கையை மாற்ற முடியும். அவர் மட்டுமே உன் ஆவியைப் புதுப்பித்து உன் ஆத்துமாவைத் தொட முடியும். இந்த மாற்றம் மற்றும் பரிசுத்தமாக்குதல் என்பவைகளின் வழியாக உன்னை வழிநடத்துவதே அவருடைய விருப்பமாகும்!

உன் இருதயத்தை ஆராய்ந்து, இந்த அற்புதமான மாற்றத்தை உன்னில் தொடங்கவோ அல்லது தொடரவோ ஆண்டவரை அனுமதிக்கும்படி உனக்கு அழைப்பு விடுக்கிறேன்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக் உங்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை நான் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் எப்பொழுதும் வேதாகமத்தையும், விசுவாச கைபிரதிகளையும் வாசிக்கிறேன், வேத தியானம் செய்கிறேன் மற்றும் துதிபாடல்கள் இசையைக் கேட்கிறேன். உங்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் செய்திகள் என் மனதிலும் இருதயத்திலும் உள்ள விஷயங்களுடன் தொடர்புடையவையாக இருந்து எப்போதும் என்னுடன் பேசுகிறது.” (ரிச்சர்ட்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!