உனக்கான ஆண்டவரின் வாக்குத்தத்தங்கள் இதோ நிறைவேறப்போகின்றன!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கான ஆண்டவரின் வாக்குத்தத்தங்கள் இதோ நிறைவேறப்போகின்றன!

“ஆண்டவரது வாக்குத்தத்தங்கள் தாமதமாகவில்லை… அவை உன் வாழ்வில் நிறைவேற வந்துகொண்டே இருக்கின்றன!”

ஆண்டவர் வாக்குப்பண்ணிவிட்டார், ஆனால் உன் கண்களுக்கு எதுவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை… அப்படியானால் அவர் பொய் சொல்லிவிட்டார் என்று அர்த்தமா?

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வழிநடத்தும் ஒளியாகிய வேதாகமம், “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” என்று அறிவிக்கிறது (எண்ணாகமம் 23:19).

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவர் சொன்னதை நிறைவேற்ற ஆயத்தமாக இருக்கிறார்! அவர் வாக்குப்பண்ணியதைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்: “அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.” (எரேமியா 1:12)

ஆண்டவர் எந்த விளக்கமும் அளிக்காமல் “நழுவிச் செல்வதில்லை.” அவர் சொன்னதைச் செய்வார். அவருடைய வார்த்தை அசையாததும் நிலையானதுமாக இருப்பதால் நீ அதை உறுதியாக நம்பலாம். வேறுவிதமாகக் கூற வேண்டுமானால், அவரது வார்த்தை மாறாதது.

அவருடைய வாக்குத்தத்தங்கள் மீது நீ உறுதியாக நம்பிக்கை வைக்கலாம். தேவன் வாக்களித்ததை அவர் நிறைவேற்றுவார்! அவர் ஒரு காரியத்தைச் சொன்னால், அது நிச்சயம் நிறைவேறும். (எண்ணாகமம் 23:19)

நம்பிக்கையில் உறுதியாக இரு. நீ சோர்வடைந்துவிடாதே… நம்பிக்கையை விட்டுவிடாதே! நம்பிக்கையில் பொறுமையாய் இரு, உனக்கான ஆண்டவரின் வாக்குத்தத்தத்தை நம்பு… அது ஏற்கனவே நிறைவேறும் பாதையில் உள்ளது!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “…எனக்குக் கிடைத்த ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும், குறிப்பாக என்னுடைய கடினமான காலங்களில் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் நான் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதிசயமான விதத்தில் ஆண்டவர் என்னுடன் பேசினார். உதாரணத்திற்கு : ஆண்டவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார், ரேச்சல் இயேசுவின் இருதயத்திற்கு நேராக உன் இருதயத்தைத் திருப்பு, இயேசு உன்னில் வாழ்கிறார், ரேச்சல், சகலமும் ஆண்டவரது கட்டுப்பாட்டில் இருக்கட்டும், உன் நம்பிக்கையை பலப்படுத்து, ஆண்டவர் சகலத்தையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார் என்பன போன்ற ஒவ்வொரு கருப்பொருளும் எனது தேவைகளுக்கு ஏற்ப நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் ஒவ்வொரு முறையும் அவர் என்னோடு பேசுவதை நான் உணர்ந்தேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நன்றி!” (ரேச்சல்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!