கிறிஸ்துமஸ், பலவீனர் பெலன் பெறும் விடுமுறை நாட்கள்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› கிறிஸ்துமஸ், பலவீனர் பெலன் பெறும் விடுமுறை நாட்கள்…

நாம் விடுமுறை நாட்களுக்குள் பிரவேசிக்கப்போகிறோம்… கிறிஸ்துமஸ் விளக்குகள், பரிசுகள், சுவையான உணவுகள், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் போன்றவை மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள்… கிறிஸ்துமஸ் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியான நேரமாகும். நாம் நம்மை உற்சாகப்படுத்திக்கொள்ள விரும்பும் காலம்தான் கிறிஸ்துமஸ்!

இருப்பினும், முதன்முதலான கிறிஸ்துமஸ் தினமானது அவ்வளவு வசதியான ஒரு நாளாக இருக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அது பலவீனங்கள் நிறைந்த ஒரு நாளாக இருந்தது. பின்வரும் அலங்காரங்களை சற்று கற்பனை செய்து பார்: ரோமானியக் குடிகளின் ஆக்கிரமிப்பால் நிறைந்த பகுதிகளுக்குக் கட்டளையிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம்; கிராமப்புறங்களுக்கு நடுவில், கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு கிராமம்; விலங்குகளுக்கான ஒரு தங்குமிடம்; நீண்ட பயணத்தால் சோர்வடைந்த ஒரு இளம் பெண்; ஒரு பக்கம் சில மேய்ப்பர்கள், ராஜாதி ராஜாவை வரவேற்க யாரும் இல்லை…

அற்புதங்களுள் பெரிய அற்புதம், மிகப்பெரிய பலவீனத்தின் வடிவில் வந்த அந்த இரவை, இயேசு பிறந்த நிகழ்வை மிகத் துல்லியமாக சித்தரிக்கிற இந்த கிறிஸ்துமஸ் கேரல் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்…

“பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே”

https://youtu.be/jTGg2AFiDIM?si=dfydV7DZ812XmJbJ

பெத்லகேம் நகரமானது இயேசு பிறப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளாலும் நிரம்பிய ஒரு இடமோ, அல்லது நாகரீகமான “வளர்ந்து வந்துகொண்டிருந்த” ஒரு நகரமோ அல்ல! இந்த சிறிய நகரம் வணிக தலைநகராகவோ, அல்லது கலாச்சார தலைநகராகவோ இல்லை, அது ஒரு சுற்றுலாத்தலமாகக் கூட இருந்ததில்லை. அது எவ்விதத்திலும் எவராலும் அறியப்படாத ஒரு கிராமமாக இருந்தது… அது அவ்வளவாய் யாருக்கும் தெரியாத ஒரு இடமாக இருந்தது.

ஆனால், முக்கியத்துவமில்லாத விஷயங்களைப் பயன்படுத்தி தம்மை மகிமைப்படுத்துவது தேவனுக்குப் பிரியமானது என்பது உனக்குத் தெரியுமா? யாரும் முக்கியமாகக் கருதாத இடங்களில் தம்மை வெளிப்படுத்தவும், யாரும் பாராட்டாத மக்கள் மூலம் தம்மைத் தெரியப்படுத்தவும் அவர் விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? 1 கொரிந்தியர் 1:26-31ல் இதைப் பற்றி மேலும் வாசிக்கலாம்.

நீ பலவீனமாகவும், களைப்பாகவும், உன்னை முக்கியமற்ற ஒரு நபராகவும் உணர்கிறாயா? சோர்வடைய வேண்டாம். உன் பலவீனத்தைக் கண்டு தேவன் ஆச்சரியப்படவில்லை. உண்மையில், உன் பலவீனத்தின் மூலமாகவே அவர் தன்னை மகிமைப்படுத்த உன்னில் செயல்படுவார்.

கிறிஸ்துமஸ் என்பது பலவீனத்தின் விடுமுறையாக இருக்கிறது…

இது தேவன் மனுஷனாக மாறிய நாள், அவர் ஒரு அறியப்படாத நபராகவும், காயப்படத்தக்க மனுஷனாகவும் தோன்றின ஒரு நாளாகும்.

மகிமையின் ராஜாவாகிய இயேசு, நம்முடைய பலவீனத்தில் நம்மோடு இணைந்து செயல்பட வருகிறார்.

சமாதான பிரபுவாகிய அவர், நம் வாழ்க்கையில் பலவீனமாக இருக்கும்போது தான் பலமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வருகிறார்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!