உன் ஆலோசனைக் கர்த்தர் சொல்வதைக் கேள்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஆலோசனைக் கர்த்தர் சொல்வதைக் கேள்…

இந்த வாரம், ஏசாயா புத்தகத்திலிருந்து தேவனுடைய குமாரனின் பல நாமங்களைத் தியானிக்கும் ஆய்வில் நாம் சிறிது நேரம் செலவிடப் போகிறோம்.

பழைய ஏற்பாட்டில், இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய வருகையைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். மேலும் தேவன் தம்முடைய தூதரின் வாயிலாக, தம் குமாரனுக்கு வெவ்வேறு நாமங்களைக் கொடுக்கிறார். இந்த நாமங்கள் ஒவ்வொன்றும் பிதாவின் இருதயத்தையும், அவர் தமது குமாரன் மூலம் மனிதர்களுக்கு என்ன செய்ய விரும்பினார் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; … அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, … என்னப்படும்.” (வேதாகமம், ஏசாயா 9:6)

இயேசுவே உன் ஆலோசனைக் கர்த்தர், அவர் ஒரு “அற்புதமான ஆலோசனைக் கர்த்தர்.”

இந்த நாமத்தை நமக்கு வெளிப்படுத்துவதன் மூலம், நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானங்களிலும் ஆண்டவர் நம்மோடு கூட இருந்து, நமக்கு ஆலோசனை வழங்க விரும்புகிறார் என்பதையும், அவர் நமக்காக உண்டாக்கின பாதையில் நம்மை வழிநடத்த ஆயத்தமாக இருக்கிறார் என்பதையும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.

இதற்குமேல் என்ன செய்வது என்று உனக்குத் தெரியாத வேளையில்,​ நீ மனம் தளர்ந்துபோகும்போது, அமைதியாக அமர்ந்திரு, உன் பயத்தைத் தணியப்பண்ணு… உனது அற்புதமான ஆலோசகர் உன்னிடம் பேசுவதைக் கேட்டு அதன்படி நீ நடக்கப்பழகிக்கொள்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!