நீ தனித்துவமான ஒரு நபர்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
தேவன் உருவாக்குகிறவராய் இருக்கிறார், அவரிடத்தில் உத்வேகம் ஒருபோதும் குறைந்துபோவதில்லை… நீ உட்பட, அவருடைய சிருஷ்டிப்புகள் ஒவ்வொன்றும், விசேஷமானது! உன் தாலந்துகள் மற்றும் உன் திறமைகளைப் போலவே, நீ ஒரு விசேஷமானவன்/விசேஷமானவள்.
நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்பினார். ஆம், உன்னிடம் ஏதோ ஒரு சிறப்பு உண்டு! இந்த உலகத்தில் உன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான, ஒரு வகையான விசேஷித்த தன்மை ஒன்று உன்னிடம் உள்ளது.
ஒருவேளை, அது என்ன என்பதை நீ ஏற்கனவே அறிந்திருக்கலாம். மேலும், உன்னை விசேஷித்த நபராகச் செய்வது எது என்று இன்னும் உனக்குத் தெரியாவிட்டால், ஆண்டவர் உனக்குக் கொடுத்திருக்கிறதும், மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடியதுமான உனக்குள் இருக்கும் இந்தத் தாலந்து அல்லது குணநலன்களைக் கண்டறி! நீ அதை வளர்த்துக்கொள்ளும்படிக்கு, அதை உனக்கு வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடம் கேள்.
இதோ, உனக்காகவே ஒரு விசேஷித்த வேத வசனம்… “உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: … நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே” (ஏசாயா 44:2)
நான் உனக்கு நன்றி சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் எனது செய்தியை வாசிப்பதற்கு நன்றி! நான் உன்னை மிகவும் பாராட்டுகிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நபரையும் உன்னால் மாற்ற முடியும், அப்படிதான் இந்த உலகத்தை மாற்றக்கூடிய ஆற்றல் உன்னிடம் உண்டு. நண்பனே/தோழியே, நீ ஒரு அதிசயம்!