நீ பொருளாதாரக் கவலைகளால் மூழ்கிப்போய் இருக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ பொருளாதாரக் கவலைகளால் மூழ்கிப்போய் இருக்கிறாயா?

பரலோக ராஜ்யத்தின் முதன்மையானவர்களும் பிரதானமானவர்களுமான குடிமக்கள் என்று நாம் நம்மைக் கருதினாலும், இங்கே இப்போது, நாம் உலகத்தின் ஒரு பகுதியினராக இருக்கிறோம் என்பதால் கட்டணங்கள், வாடகை, வாகனச்செலவுகள், காப்பீடு போன்றவற்றை நாம் செலுத்த வேண்டியுள்ளது…

வாழ்க்கைக்கான செலவு என்பது ஒரு யதார்த்தமான உண்மையாக இருக்கிறது. சில சமயங்களில் இந்த ஒரு எண்ணம் மற்ற அனைத்தையும் விழுங்கி, உனது சந்தோஷத்தைப் பறித்துக்கொண்டு, உன் விசுவாசத்தை சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம். அந்த நேரங்களில், பொருளாதார நெருக்கடியால் நசுக்கப்படுவதை நீ உணர்ந்திருக்கலாம்.

இருப்பினும் சங்கீதம் 132:15ல், “அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்” என்று ஆண்டவர் அறிவிக்கிறார்.

அவருடைய வார்த்தை லூக்கா 12:27-28ல், “காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டவர் உன் தேவைகளின் ஆழமும் அகலமும் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை அறிந்திருக்கிறார். அவரால் அதை சந்திக்க முடியும்; அவர் உன் ஒவ்வொரு தேவைகளையும் நிறைவேற்ற விரும்புகிறார்! அவர் உன்னை மறந்துவிடவில்லை: எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள்ளும்படி அவர் உன்னைத் தனியே விட்டுவிடவும் மாட்டார்.

அவருடைய வார்த்தையையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் உறுதியாகப் பற்றிக்கொள். பொருளாதார பிரச்சனை உட்பட, எல்லாவற்றிலிருந்தும் உன்னை விடுவிப்பவர் அவரே!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஒவ்வொரு நாளும் நான் காலையில் எழுவது ஒரு ஆசீர்வாதமே. எனக்கு பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும்கூட, எனது முக்கியமான கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன. எனக்குப் போராட்டங்கள் இருந்தாலும், அவை என் போராட்டங்களிலிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கட்டாக இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார், மற்றும் என்னை விட்டுவிலகவும் மாட்டார் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நான் நம்பி இருக்கிறேன். சிறந்தது எனக்கு வர இருக்கிறது.” (லிடியா)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!