நிபுணர்களுக்குக் கூட துவக்கம் என்ற ஒன்று தேவைப்படுகிறது!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ எப்போதாவது இப்படிப்பட்ட கேள்விகளை உனக்குள் கேட்டுக்கொண்டதுண்டா “இந்தப் புத்தகத்தை எழுதும் பயணத்தை நான் ஏன் தொடங்க வேண்டும்? என்னைவிட திறமைப்பெற்றவர்கள் இருக்கிறார்களே! என்னது, மேடையில் நின்று பேச வேண்டுமா? என்னது, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா?, மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா?, அந்தத் திட்டத்தைத் தொடங்க வேண்டுமா? சமீப காலமாக நான் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்று பார்த்தாயா?”
இருந்தாலும் கூட… நடக்கக் கற்றுக்கொள்வதற்கு முன் ஓட ஆரம்பித்தது யார்? பேச கற்றுக்கொள்வதற்கு முன் பாடினவர்கள் யார்?
பெரிய திட்டங்களும் கூட, வெற்றியை காண்பதற்கு முன்பு, முதலில் அது ஏதோவொரு இடத்திலிருந்து உருவாகுகிறது.
தேவன் உன் இருதயத்தில் கனவுகளையும் யோசனைகளையும் வைத்திருக்கிறார்… அவர் உன் ஆவியுடன் பேசியிருக்கிறார்!
என் நண்பனே/தோழியே, அவருடைய வல்லமையின் மூலமாகவும் அவருடைய மகிமைக்காகவும் நீ செய்யக்கூடிய நற்கிரியைகளை அவர் முன்னதாகவே ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார் என்பது முற்றிலும் நிச்சயமானது! (வேதாகமத்தில் எபேசியர் 2:10ஐப் பார்க்கவும்).
இன்று, நீ நினைத்திருக்கும் அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கும், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும், ஒரு நிலையை அடைவதற்கும்… தேவன் உன் இருதயத்தில் எதை வைத்திருக்கிறாரோ, அதை நோக்கி ஒரு அடியை உறுதியுடன் முன்னோக்கி எடுத்துவைக்கும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.
தேவனுடைய உதவியுடன், உன்னால் சாதிக்க முடியும்! இதற்கும் மேலாக, நீ அதில் சிறந்த ஒரு நபராகவும் விளங்கமுடியும்!
அவர் உனக்காக முன்தாகவே ஆயத்தம் பண்ணிவைத்திருக்கிற பணிகளை நிறைவேற்ற உனக்குத் தேவையான பலத்தையும் உறுதியையும் அவர் உனக்குத் தர வேண்டும் என்று கர்த்தரிடத்தில் ஜெபித்து, வேண்டிக்கொள்ளுமாறு நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.
“கர்த்தாவே, உமது அழைப்பிற்கு நான் செவிகொடுக்கிறேன்! என்னுடைய வாழ்க்கைக்கான திட்டம் உம்மிடம் இருக்கிறது என்றும், உமது மகிமைக்காக குறிப்பிட்ட சில பணிகளைச் செய்யுமாறு என்னிடம் சொல்லியிருக்கிறீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன்! நான் உம்மை நம்புகிறேன். உமது பலத்தால் என்னை நிரப்புவீராக. பிலிப்பியர் 2:13ல் நீர் சொல்லியிருப்பதைப்போல, உமக்கு விருப்பமானதைச் செய்ய எனக்கு விருப்பத்தையும் பலத்தையும் தருவீராக, அதன் மூலம் நான் எழுந்து இந்தத் திட்டத்தை (குறிப்பாக உன் இருதயத்தில் உள்ள திட்டத்தின் பெயரைக் குறிப்பிடு) உமது மகிமைக்காகத் தொடங்குவேன்! ஒவ்வொரு நாளும் என்னை ஆதரிப்பதற்காகவும், என்னோடு கூட வருவதற்காகவும் நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”