நீ தலைசிறந்த தெய்வீகப் படைப்பு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ தலைசிறந்த தெய்வீகப் படைப்பு!

நவநாகரிகம் (Haute couture) என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? இது விருப்பத்திற்கேற்ப பிரத்தியேக ஆடைகளை தயார் செய்யும் ஒரு தொழில் துறை. இது அநேகரைக் கனவு காண வைக்கும் ஒரு உலகமாகும். அழகுநயப்புக் காட்சிகளின்போது காண்பிக்கப்படும் ஒவ்வொரு உடையும் ஒரு தனித்துவமான கலைப்படைப்பாக இருக்கும்… கடின உழைப்பினாலும், உன்னிப்பான மற்றும் துல்லியமான வேலைப்பாடுகளினாலும் கலந்து உருவாக்கப்படும் ஆயிரத்தில் ஒன்றைப் போன்றது.

நம் ஆண்டவரும் ஒரு மிகச் சிறந்த கலைநயமுள்ளவராய் இருக்கிறார், அவர் பிரமிக்கத்தக்க வகையில் கலைநயமிக்க தனித்துவமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்… ஜீவனைப் போல! நீயும் அவருடைய படைப்புகளில் ஒன்று!

“நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.” (வேதாகமத்தில் ஏசாயா 43:7ஐப் பார்க்கவும்)

உன் கண்களின் நிறம் முதல் உன் குணாதிசயம் வரை உன்னிடம் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் தேவன் மிகக் கவனமாக யோசித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நம்மில் எத்தனை பேருக்கு நம் உடல்வாகு, தோற்றம், குணாதிசயம் என்பன போன்ற விஷயங்களை பற்றி மனதிற்குள் தாழ்வு மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கை இல்லாத மனப்பான்மை உள்ளது? நினைத்துப்பாரு. ஆனால் இன்று தெரிந்துகொள், ஆண்டவர் நீ இப்போது இருப்பது போலவே உன்னை நேசிக்கிறார்.
அவர் உன்னைப் பார்க்கும்போது, நீ வெறுக்கும் உன்னிடமுள்ள குறைபாடு மூலம் அவர் உன்னைப் பார்ப்பதில்லை. கிறிஸ்துவின் இரத்தம், அவருடைய பரிசுத்தம், அவருடைய கிருபை மற்றும் அவருடைய அன்பின் மூலமாக அவர் உன்னைப் பார்க்கிறார்!

உன்னைச் சிரமப்படுத்துவது எதுவாக இருந்தாலும் சரி, தேவன் உன்னை மிகவும் அக்கறையுடனும், பாசத்தோடும், மிகச்சரியாகவும் சிருஷ்டித்தார் என்பதை இந்த நாளில் நம்பத் துவங்கு.

நீ ஆயிரத்தில் ஒன்றான, உன் பரலோகப் பிதாவின் இருதயத்திற்கு மிகவும் பிரியமான ஒரு நபராய் இருக்கிறாய்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!