நீ மூங்கில் போன்ற ஒரு நபராய் இருக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ மூங்கில் போன்ற ஒரு நபராய் இருக்கிறாயா?

ஆண்டவருடைய தெய்வீக படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகமாயிருக்கிறது. இன்று, ஜப்பானிய மூங்கில் மரத்தைப் பற்றி உன்னுடன் பேசப்போகிறேன். இந்த மரம் 130 அடி உயரம் வரை வளரும். எத்தனை ஆச்சரியம், இல்லையா?

இருப்பினும், அதன் வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகளுக்கு, பூமிக்குள்ளிருந்து எதுவும் வெளியே வருவதில்லை. இந்த நேரத்தில் மூங்கில் வேர்கள் மறைவில் வளர்ந்துகொண்டிருக்கும். பின்னர், ஏழாவது ஆண்டில், ஒரு துளிர் தோன்றும்! இந்த நிமிஷம் முதல் அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாய் இருக்கும்… ஒரு நாளைக்கு அதனால் மூன்றடி வரை வளர முடியும்!

ஆனால் இதற்கும் உனக்கும் உள்ள தொடர்பு என்ன? ஆண்டவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது : “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” (வேதாகமத்தில் எபிரேயர் 10:36ஐப் பார்க்கவும்)

இரகசியம் என்னவென்றால், பொறுமையாய் இருப்பதுதான். உன்னுடைய வளர்ச்சி வெளியே தெரியாமல் தேங்கி நிற்பதாக உணர்ந்தாலும், கைவிடாதே… முயற்சியை நிறுத்திவிடாதே! உண்மை என்னவென்றால், உன் “வேர்கள்” ஆழமடைந்துகொண்டிருக்கின்றன. தேவனுடனான உன் உறவும், அவர் மீதான உன் நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது.

உன் முயற்சிக்கான பலன் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் கூட, தேவன் உன் முயற்சிகளையும், உன் மனவுறுதியையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். மேலும் உன் நன்மைக்காக உனக்கு பின்னால் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் உறுதியாய் இரு! விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் உனக்கு வாக்குப்பண்ணப்பட்ட சுதந்தரவீதத்தில் நீ பிரவேசிப்பாய்.

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “கர்த்தாவே, பொறுமையுடனும் அன்புடனும் என்னை வடிவமைத்து ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறவர் நீரே. நான் விதைத்த விதைக்கான பலனை நான் இன்னும் காணவில்லை என்றாலும், ஒரு நாள் அது பலன்தரும் என்று நான் விசுவாசிக்கிறேன்! நீர் எனக்கு உதவி செய்கிறீர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்… நான் என் சுதந்தரவீதத்திற்குள் நிச்சயம் பிரவேசிப்பேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!