இயேசுவும் கூட ஒரு காலத்தில், தேவனிடமிருந்து தாம் வெகு தூரத்தில் இருந்ததாக உணர்ந்தார்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசுவும் கூட ஒரு காலத்தில், தேவனிடமிருந்து தாம் வெகு தூரத்தில் இருந்ததாக உணர்ந்தார்…

இந்தக் காலை வேளையில், தேவன் உன்னைப் புரிந்துகொள்கிறார்… என்ற இந்த வார்த்தையின் மூலம் நான் உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.

  • நீ சந்தேகிக்கும்போது, ​​உன் சந்தேகங்களை தேவன் புரிந்துகொள்கிறார்.
  • நீ பயப்படும்போது, ​​தேவன் உன் பயத்துக்கான காரணத்தைப் புரிந்துகொள்கிறார்.
  • நீ துன்பப்படும்போது, ​​உன் துன்பத்தை தேவன் புரிந்துகொள்கிறார்.
  • உன்னால் புரிந்துகொள்ள முடியாதபோது, ​​உன் இயலாமையை தேவன் புரிந்துகொள்கிறார்.
  • தேவனுடைய பிரசன்னம் உன்னுடன் இருப்பதை உன்னால் உறுதியாக உணரமுடியாதபோது, ​​தேவன் அதையும் புரிந்துகொள்கிறார்.

இந்த உணர்வுகளை அவர்தாமே அனுபவித்ததால், அதை அனுபவிக்கும் உன்னை அவர் புரிந்துகொள்கிறார். உண்மை என்னவென்றால், இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், அவர் முற்றிலும் மனுஷனாக மனுவுருவானார். எனவே, சந்தேகம், பயம், துன்பம், புரிந்துகொள்ள இயலாமை போன்றவைகளாகிய ஒரு மனுஷன் தாங்கக்கூடிய அனைத்தையும் அவர் தாங்கினார்.

இந்த உணர்வுகள் அவருக்குள் மிகவும் தீவிரமாக இருந்ததால்தான், சிலுவையில் அவர் தமது ஜீவனை விடும்போது, ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று கதறினார் (வேதாகமத்தில் மாற்கு15:34ஐப் பார்க்கவும்).

இயேசு கூட, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்ததாக உணர்ந்தார்.

இதனால்தான் நீ என்ன உணர்கிறாய் என்பதை அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது… இதனால்தான் அவரால் “உன்னை”ப் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் இந்த சந்தேகம், பயம் மற்றும் துன்பம் அனைத்தையும் ஜெயித்ததால், மரணத்தையும் கூட ஜெயித்ததால்தான், நமக்கு இந்த உறுதியான நம்பிக்கை உண்டு… இன்றும் நம் சந்தேகங்கள், பயங்கள் மற்றும் துன்பங்களிலிருந்து அவரால் நம்மை விடுவிக்க முடியும்!

அவர் உன்னை எந்த அளவுக்கு புரிந்துகொள்கிறார் என்பதையும், உன் சூழ்நிலையில் தலையிட அவருக்கு எவ்வளவு வல்லமை இருக்கிறது என்பதையும் இந்த தருணத்தில் அவருடைய சமுகத்தில் உணரவும் அறியவும், உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

ஊக்கமுடன் இரு, ஆசீர்வாதமாய் இரு. நான் உன்னை நேசிக்கிறேன், உனக்காக ஜெபிக்கிறேன்!

சாட்சி: “திரு. எரிக் அவர்களே, நான் காலை 4 மணிக்கு என் காலை வேத தியானத்திற்காக எழுந்தபோது எனக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் ஒருவித பயத்துடன் இருந்தேன், என் காலை தியானத்தை எப்படி செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு ஆச்சரியமளிக்கும் வண்ணமாக, தேவனுக்கு நன்றி சொல்லி, அவரைத் துதிக்குமாறும், என் தேவைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையின் மீது ஒருபோதும் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் பரிசுத்த ஆவியானவர் உணர்த்தினார். திரு எரிக் அவர்களே, நான் சொல்வது உண்மை, நான் என் வேத தியானத்தை முடித்த பிறகுதான்… தேவ சமாதானம் என் முழு உள்ளத்தையும் நிரப்பியது. அன்றைய நாளில் எனக்கு நிகழ்ந்த ஒரு அதிசயம் என்னவென்றால், தவறான புரிதலின் காரணமாக நீண்ட காலமாக என் சகோதரனுடன் எனக்கு இல்லாதிருந்த அந்த பிரகாசமான தருணம் மீண்டும் எனக்குக் கிடைத்தது. உண்மையில், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் தேவனைத் துதிப்பது அழகானது. இன்று என்ன நடந்தது என்பதை உங்கள் மின்னஞ்சல் உறுதிப்படுத்தியது; இந்த சிறந்த ஐக்கியத்தை வழங்கும் இணையதளத்தில் இணைந்திருப்பது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.

நான் ‘அனுதினமும் ஒரு அதிசயத்தில்’ சேர்ந்ததிலிருந்து என் வாழ்க்கையில் விஷயங்கள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஒளியின் வேகத்தில் மாறி வருகின்றன. திரு எரிக் அவர்களே, நீங்கள் தினமும் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல் மூலம் தேவன் அனுதினமும் என்னுடன் பேசுகிறார். தயவுசெய்து இந்த நற்கிரியையைத் தொடர்ந்து செய்யுங்கள். மெய்யாகவே இது கர்த்தருடைய செய்கையாய் இருக்கிறது, இது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிற்று. ‘அனுதினமும் ஒரு அதிசயம்!’ என்ற புத்தகத்திலிருந்து நான் வாசித்த சாட்சிகள், தேவன் மீதான விசுவாசத்தில் மற்றொரு நிலைக்கு என்னைக்கொண்டு சென்றிருக்கிறது. உங்களது வாழ்விற்காய் நன்றி.” (ராயன்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!