கிறிஸ்து மரித்தார், அவரே உயிர்த்தெழுந்தவராயும் இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› கிறிஸ்து மரித்தார், அவரே உயிர்த்தெழுந்தவராயும் இருக்கிறார்!

நீ இயேசுவோடு உன்னை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்! நம்முடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது…

  1. நிராகரிக்கப்பட்டிருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.
  2. காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.
  3. கைவிடப்பட்ட ஒரு நபராய் இருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.
  4. தவறாக நடத்தப்பட்டிருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.
  5. சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.
  6. வேதனையில் இருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.
  7. தனிமையில் இருக்கிறாயா? அவரும் அதை அனுபவித்திருக்கிறார்.

என் அன்பரே, நீ நிராகரிக்கப்பட்டதால் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறாயா? நீ அசட்டை பண்ணப்பட்ட ஒரு நபராகவோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு நபராகவோ உணர்கிறாயா? ஏசாயா தீர்க்கதரிசனமாக தனது புஸ்தகத்தின் 53ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முன்னறிவித்தது போலவே நீ இருக்கிறாயா,

“…அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.” (வேதாகமத்தில் ஏசாயா 53:2-4ஐப் பார்க்கவும்)

இயேசு, பல அற்புதங்களை செய்தபோதும், அவர் நிராகரிக்கப்பட்டார், அசட்டைபண்ணப்பட்டார் மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் பாதையில், மக்களது சீற்றத்தால் எழுந்த கூச்சல்கள், வெறுப்பு, கைவிடப்படுதல் மற்றும் மனிதர்களால் நிராகரிக்கப்படுதல் போன்ற பாடுகளை அவர் அனுபவித்தார். அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் சிலுவையில் அறையப்படும்படி சென்றார். அவர் மரிப்பதற்கு சற்று முன்பு, பிதாவைப் பார்த்து, “ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்டார். அவர் சிலுவையில் செய்த தியாகமானது, நம்முடைய பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்படவும், நம் நோய்களிலிருந்து நாம் குணமடையவும், இன்று பிதாவைத் தொடர்புகொள்ளவும் நம்மை அனுமதிக்கிறது. ஏசாயா 53:5ல் உள்ள வசனத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, “…நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”

நாம் ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கிறோம்… இயேசு உயிர்த்தெழுந்தார்! அவருடைய அன்பு நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. எனக்கு அன்பானவரே, நீ உணரும் நிராகரிப்பு மற்றும் தவறான புரிதலின் மத்தியிலும் இயேசு உன்னை நேசிக்கிறார், ஏனென்றால் நீ என்ன பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை அவர் அறிந்திருக்கிறார் மற்றும் உன்னை முழுமையாகப் புரிந்துகொள்கிறார்.

நீ அவருடன் உன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வெற்றி பெறலாம்… அப்போஸ்தலர் 4:11ல் இயேசுவைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, “…வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.” (வேதாகமத்தில் பார்க்கவும்)

இயேசுவோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்வது, அவருடைய பாடு மற்றும் சிலுவையுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வது, சில சமயங்களில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் கடினமான பாதையாக இருக்கிறது. ஆனால் அது வெற்றிக்கான பாதையும் உயிர்த்தெழுதலின் பாதையுமாய் இருக்கிறது என்பதை மறவாதே!

“தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”
(வேதாகமத்தில் ரோமர் 8:33-34ஐப் பார்க்கவும்)

அவருடைய மரணத்திலும் அவருடைய உயிர்த்தெழுதலிலும் நீ அவரோடு உன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் தேவனுக்குத் துதி செலுத்து. நீ அவருடன் வெற்றிக்கான பாதையில் இருக்கிறாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!