சிறந்ததை தேர்வு செய்

முகப்பு ›› அற்புதங்கள் ›› சிறந்ததை தேர்வு செய்

ஆண்டவர், அவர் செய்யும் எல்லாவற்றிலும் நேர்த்தியானவர். அவருடைய ஒவ்வொரு முடிவும் சரியானது, அவருடைய தேர்வுகளும் கூட. நீ ஆண்டவர் தேர்ந்துக்கொண்ட ஒருவர். நீ தற்செயலாக இங்கு வரவில்லை. உன் பரலோக அப்பா நீ உலகிற்கு வர வேண்டும் என்று ஏங்கினார் – நீ பிறப்பதற்கு முன்பே, நீ அவருடைய இதயத்தில் ஏற்கனவே இருந்தாய்.

அதனால்தான், ஒவ்வொரு நாளும், உன் வாழ்க்கைக்கு சிறந்ததை நீயும் தேர்வு செய்யலாம்.

  • அநீதியின் முகத்தில், மன்னிப்பதைத் தேர்ந்துக்கொள்.
  • பகைமையின் முகத்தில், அன்பு காட்டு.
  • துன்பத்தின் முகத்தில், மகிழ்ச்சியைத் தேர்ந்தெடு.
  • சாத்தியமற்ற சூழலில், ஆண்டவருடன் இது சாத்தியம் என்று அறிக்கையிடு.

நீ சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும், உனக்கு எப்போதும் இரண்டு மனப்பான்மைகளுக்குரிய விருப்பத்தேர்வு இருக்கும் : பூமிக்குரியது அல்லது பரலோகத்திற்குரியது.

நீ பூமியின் உப்பாகவும், உலகின் ஒளியாகவும் இருப்பதால், உன் செயல்கள் மற்றும் உன் வார்த்தைகளின் மூலம் உன்னை நீயே நிலைநிறுத்திக் கொள்.

சிறந்ததைத் தேர்ந்தெடு – பரலோகத்தின் மனோபாவத்தைத் தேர்ந்தெடு!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!