உன் விசுவாசத்தை பலப்படுத்து
முகப்பு ›› அற்புதங்கள் ››
“பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.” (1 யோவான் 2:14)
நம் உடம்பிற்கு உடற்பயிற்சி தேவை. உடல் பயிற்சி நமக்கு நம்மையானது.
அதேபோல நம் விசுவாசத்திற்கும் பயிற்சி தேவை! விசுவாசத்தை அனுதினம் உபயோகிப்பது மிகவும் நன்மையானது.
அப்படியென்றால் நீ உன் விசுவாசத்தை உபயோகப்படுத்தி அதை எப்படி பலப்படுத்துவாய்? பின்வரும் பட்டியல் அனைத்தையும் உள்ளடக்கியதல்ல, ஆனால் உனக்கு உதவக்கூடிய பல யோசனைகள் இதில் உள்ளன…
- உன் அடையாளத்தை அறிந்திருப்பது: நீ ஆண்டவரின் பிள்ளை.
- ஆண்டவரின் மீதுள்ள உன் நம்பிக்கையை உறுபடுத்திக்கொள்வது.
- கர்த்தருக்கு புகழ் பாடுவது.
- மற்ற சகோதர சகோதரிகளுடன் கூடுகைகளில் பங்கேற்பது.
- ஒரு நல்ல பிரசங்கத்தைக் கேட்பது.
- ஆண்டவருடைய வார்த்தையை தியானிப்பது.
- ஆண்டவருடைய வார்த்தையை சத்தமாக அறிக்கையிடுவது.
- உன்னுடன் பேசவும் வழிகாட்டவும் பரிசுத்த ஆவியானவரை அனுமதிப்பது.
- உன்னை சுற்றியுள்ள மற்றவர்களுடன் உன் விசுவாசத்தை பகிர்ந்து கொள்வது.
- உன் வாழ்வில் அவருடைய இரக்கத்தை அறிவிப்பது.
ஆண்டவர் மீதான உன்னுடைய விசுவாசத்தை நீ எவ்வளவு அதிகமாக உறுதிப்படுத்துகிறாயோ, நீ அவ்வளவாக, ஒரு கடினமான நாள், புதிய போர் அல்லது ஒரு சோதனையை எதிர்கொள்ள முற்றிலும் தயராக இருக்கமுடியும்.
மாபெரும் கோலியாத் தோன்றி உன்னை அச்சுறுத்தும் போது, தாவீது செய்தது போலவே, நீ அவனை பின்னுக்குத் தள்ளி, இஸ்ரவேலின் படைகளின் ஆண்டவரின் பெயரில் அவனை வெல்லலாம்! தாவீது கரடிகளையும் சிங்கங்களையும் சண்டையிட்டு பயிற்சி பெற்றான், பலத்தில் வளர்ந்தான், என்று வேதாகமம் சொல்கிறது (1 சாமுவேல் 17:34)… ஆதலால் அந்த ராட்சதன் வந்த நாளன்று, தாவீது அவன் மீது வெற்றி பெற்றான்.
என் அன்பரே, உன் விசுவாசத்தை நீ இன்னும் பலப்படுத்தத் தொடங்கினால் என்ன நடக்கும்?