நீ முக்கியத்துவமில்லாத ஒரு நபர் அல்ல!
முகப்பு ›› அற்புதங்கள் ››
கூட்டத்தின் நடுவே நீ ஒரு முக்கியமற்ற நபரைப்போல் இருப்பதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா?
நீ ஒன்றுமில்லாத ஒருவரைப் போலவும், அசட்டை செய்யப்பட்ட நபராக இருப்பதைப் போலவும் இருந்து, என்னைப் பற்றி நினைக்க யாராவது இருக்கிறார்களா என்று உன்னை நீயே கேட்டுக்கொண்டதுண்டா?
நீ ஆண்டவரின் மனதில் இருக்கிறாய்!
- ஆண்டவர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார் (வேதாகமம், ஏசாயா 45:4ஐப் பார்க்கவும்)
- நீ எப்போது எழுகிறாய், எப்போது படுக்கிறாய் என்பதை அவர் அறிவார் (வேதாகமத்தில் சங்கீதம் 139:2ஐப் பார்க்கவும்)
- உன் எதிர்காலம் அவர் கரத்தில் உள்ளது. உனக்காக விதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்களையும் அவர் அறிவார், அவற்றில் எதுவும் அவருக்கு மறைவாக இருப்பதில்லை.
- நீ அவருக்கு மறைவாக இருக்கவில்லை, உன் சூழ்நிலைகளும் மறைவாக இல்லை.
- கூட்டத்தின் நடுவில் உள்ள உன்னை அவர் பார்க்கிறார். அவர் உன்னை ஈடு இணையற்ற அன்போடு நேசிக்கிறார், நீ என்ன அனுபவித்துக்கொண்டிருக்கிறாய் என்பது அவருக்குத் தெரியும்.
- அவருடைய இருதயம் உன்மீது உள்ள நித்திய அன்பினால், மரணத்தை ஜெயித்த அன்பினால் பொங்கி எழுகின்றது.
நீ முக்கியமற்ற ஒரு நபர் அல்ல!
நீ அவருடையவன்/அவருடையவள்!
"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்
* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை
அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.