நீ தேவனுடைய ஆலயம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ தேவனுடைய ஆலயம்!

சங்கீதம் 27ல், தேவனுடைய வீட்டைப் பற்றி பேசும் வசனம் 4ஐ தொடர்ந்து பார்ப்போம்.

“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” (வேதாகமம், சங்கீதம் 27:4). நீ பாதுகாப்பாய் இருக்கும் ஒரு இடம் இருக்கிறது, அங்கு எதுவும் உன்னைத் தொட முடியாது… அது கர்த்தருடைய வீடு. ஆண்டவரின் மகத்துவத்தையும் அழகையும் காணக்கூடிய அமைதியான இடம் என்பதால் தாவீது அங்கு வாழ ஏக்கம் கொண்டார்.

ஆனால் இந்த இடம் எங்கே இருக்கிறது? தாவீதைப் பொறுத்தவரை, அது எருசலேமின் ஆலயமாக இருந்தது, ஏனென்றால் அந்த நேரத்தில், இயேசுவின் வருகைக்கு முன்பு, ஆண்டவர் ஒரு பூமிக்குரிய இருப்பிடத்தில் தம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தினார். பின்னர், கிறிஸ்து ஆண்டவருடனான ஒரு புதிய உடன்படிக்கையை அறிமுகப்படுத்த வந்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல், “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை” என்று சொல்லுகிறார் (வேதாகமம், அப்போஸ்தலர் 17:24).

அப்படியானால், அவர் எங்கு வாழ்கிறார்? உன்னில்! “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?(1 கொரிந்தியர் 3:16)

இதை உணர்ந்தாயா? நீதான் தேவனுடைய ஆலயம்!

எனவே, தேவனுடைய வீட்டில் வசிப்பது என்பது பரிசுத்த ஆவியானவரை வரவேற்பதாகும். அதன் அர்த்தம் நீ உனக்குள் இருக்கும் அவரது வாசஸ்தலத்தை இரசிப்பதாகும். நீ ஆண்டவரின் சிருஷ்டியாய் இருக்கிறாய். அவருடைய பிரசன்னம் உனக்குள் இருக்கிறது. நீ உன் முழு வாழ்க்கையையும் கர்த்தருடைய வீட்டில் வாழலாம், ஏனென்றால் அவருடைய வீடு நீதான், அவருடைய மகத்துவமான பிரசன்னம் உனக்குள் என்றென்றும் இருக்கும்! இது ஆச்சரியம் இல்லையா?

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!