சின்னச் சின்ன விஷயங்களும் முக்கியம்தான்…
முகப்பு ›› அற்புதங்கள் ››
சின்னச் சின்ன விஷயங்கள் ஆண்டவரின் பார்வையில் முக்கியமானதாய் இருக்கிறது. நீ இப்போது செய்வது முக்கியமற்றதாகவோ அல்லது அற்பமானதாகவோ காணப்படலாம். ஆனால் உன் செயல்கள், மனப்பான்மைகள் மற்றும் விசுவாசம் ஆகிய இவைகள்தான் உனது எதிர்காலத்தின் அடித்தளம்!
கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாய் இருக்கிறவனை அநேகத்தில் அதிகாரியாக்குவார் என்று இயேசு சொன்னார். வேதாகமத்திலிருந்து இது பற்றிய சில வசனங்கள் இதோ…
- “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்….” (வேதாகமம், லூக்கா 16:10)
- “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்’’ (வேதாகமம், மத்தேயு 25:21)
- “… நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு.” (வேதாகமம், லூக்கா 19:17)
- “அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்’. ‘…மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.” (வேதாகமம், மத்தேயு 25:34 மற்றும் 40)
ஆண்டவர் நிச்சயமாக உன்னை அதிகமாக நம்ப விரும்புகிறார்!
"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்
* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை
அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.