தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர்
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீங்கள் யாரை நம்ப ஆயத்தமாக இருக்கிறீர்கள்? உதாரணமாக, ஒரு நாள் முழுவதும் உங்கள் குழந்தையை கவனித்துக்கொள்ள யாராவது ஒருவர் உங்களுக்குத் தேவைப்படுவார்களானால், அவர்களைத் தேர்ந்தெடுக்க, அவர்களுக்கான தகுதியாக நீங்கள் எதை முன்வைப்பீர்கள்?
ஒருவரை நம்புவதற்கு, அந்த நபர் நேர்மையானவரா என்பதை நீங்கள் குறிப்பாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் … தான் சொன்ன வாக்கை காப்பாற்றுகிற யாராவது இருக்கிறார்களா? அவனது/அவளது வார்த்தையைப் போலவே நல்லவன்/நல்லவள் யாரேனும் உண்டா? உதவியற்ற நிலையில் யார் உங்களை விட்டுவிலகாதிருப்பார்கள்?
தேவன் முற்றிலும் உண்மையுள்ளவராயிருக்கிறார்… வேதாகமத்தில் எல்லா இடங்களிலும், அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதை நாம் காணலாம்! இந்த வல்லமைமிக்க உண்மைகளை நாம் அலசி ஆராய்வோம்:
ஏசாயா 55:11: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”.
எரேமியா 1:12: “அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன்.”
யோசுவா 21:45: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”
நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? தேவன் என்ன சொன்னாலும், அவருடைய வார்த்தை பொன்னைப் போல சிறந்தது என்பதையும், அவர் சொன்னதைச் செய்ய வல்லவர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை சார்ந்துகொள்ளலாம். அது நிறைவேறியிருக்கிறது, அது மீண்டும் நிறைவேறும்!
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம்: “தேவனே, உமது வார்த்தைக்கு நன்றி; அது வெறுமனே உம்மிடத்திற்குத் திரும்பாமல், நீர் விரும்புகிறதை செய்து, நீர் அனுப்பிய காரியம் வாய்க்கும்படி செய்யும்! உமது வாக்குத்தத்தங்களை நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய உண்மையை நான் நம்புகிறேன். நீர் சொல்லியிருக்கிற எல்லவற்றையும் நிறைவேற்றுவீர்! இயேசுவின் நாமத்தில், ஆமென்”.
நீங்கள் இருப்பதற்கு நன்றி!