நான் உன்னை கண்டறிந்தேன்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› நான் உன்னை கண்டறிந்தேன்…

இன்றைக்கு நான் உங்களிடம் பகிந்துகொள்ளப்போகும் செய்தி பிதாவினுடைய இதயத்தில் இருந்து உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட செய்தி என்று நான் நம்புகிறேன். அதுதான் இது,

உனக்கு கேட்கிறதா?

என் இதயத்தின் துடிப்பு, உன் இதயத்தின் வாசலில் நின்று, தட்டுகிறது.

என் குரல் உன்னை அழைக்கிறது, உன்னை எனக்கு சொந்தமாக்கிக்கொள்ள  அழைக்கிறது.

உன்  மாம்சமான வாழ்க்கையை பரலோகம் வந்து தொடும் சத்தம் கேட்கிறதா?

உன்னை தொலைத்ததை உணருகிறாயா?

அப்படியானால் நான் உன்னை கண்டடைய விரும்புகிறேன். என் அன்பு உன்னை சூழ்ந்துகொள்ளட்டும். உன் அடைக்கலமும், என்றுமுள்ள கேடகமும், கோட்டையுமாய் ஒவ்வொருநாளும் நானே இருப்பேனாக .

உன்னை நான் கண்டறிந்தேன்.

என் பிரசன்னத்திற்குள் வா, என்னுடன் வா.

என் கையை பிடித்து, என்னுடனே வாழ்ந்திரு.

நான் உனக்கு அளிக்கும் வாழ்வையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்.

நாளுக்கு நாள், படிப்படியாக…

நீயே என்னை கண்டறிவாய்.”

குறிப்பு : வெளிப்படுத்தின விசேஷம் 3:20 

கர்த்தருடைய மகிமையான பிரசன்னம் உங்கள் இதயத்தை நிற்பட்டும் !

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!