• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • HI Hindi
    • HI English (India)
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 10 அக்டோபர் 2023

அன்பரே, தேவன் உன்னுடன் இருக்கிறார்!

வெளியீட்டு தேதி 10 அக்டோபர் 2023

வேதாகமத்தில், இயேசு இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுகிறார், அதாவது "கர்த்தர் நம்முடனே இருக்கிறார்" என்பது அதன் அர்த்தமாகும். (மத்தேயு 1:23

எத்தனை அருமையான நாமம்!

இந்த நாமம் அனைத்தையும் கூறுகிறது: சந்தேகத்திற்கு இடமின்றி தேவன் நம்முடன் தான் இருக்கிறார்!

  • உனக்கு எல்லாமே நன்றாக நடக்கும்போது: தேவன் உன்னுடன் இருக்கிறார்.
  • காரியங்கள் சிக்கலானதாக மாறும்போது: தேவன் உன்னுடன் இருக்கிறார்.
  • நீ நேசிக்கப்படுவதையும் உதவி பெறுவதையும் உணரும்போது: தேவன் உன்னுடன் இருக்கிறார்.
  • நீ தனியாக இருப்பதாக உணரும்போது: தேவன் உன்னுடன் இருக்கிறார்.
  • உன் துன்பத்தில் நீ கைவிடப்பட்டதாக நினைக்கும்போது: உண்மையிலேயே, தேவன் உன்னுடன் இருக்கிறார்.

அவரால் உன்னைத் தனியே விட்டுவிட முடியாது... ஏனெனில் அது அவரது அடையாளம். அதுதான் அவரை வரையறுக்கிறது. அவரே உன்னுடன் ஒருபோதும் இருக்க விரும்பவில்லை என்றாலும்கூட (ஆனால் அதுவும் கூட சாத்தியமற்றது), அவரால் அப்படி இருந்துவிட முடியாது. ஏனென்றால், உன்னோடு கூட இருப்பதும், உன்னோடு  இணைந்து நடப்பதும்  அவருடைய ஆழமான சுபாவமாகும்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இயேசு உன்னோடு கூட இருக்கிறார்!

இன்று, நீ முற்றிலுமாக சூழப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறாய்... தேவன் உன்னோடு கூட இருக்கிறார்! 

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “’அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற மின்னஞ்சலானது, தீராத தசைவலி உள்ள என்னைப் போன்ற ஒருவருக்கு, ஆண்டவர் என்னோடு கூட இருக்கிறார் என்பதையும், அவரோடு கூட நான் அனுபவிக்க இருக்கும் எதிர்கால மகிமைக்காக அவரிடமிருந்து எனக்குக் கிடைக்கிற பயிற்சியின் ஒரு பகுதிதான் இது என்பதையும் எனக்கு நினைவூட்டுகிறது."  (தெரசா)

Eric Célérier
எழுத்தாளர்

அனுதினமும் ஒரு அதிசயம் பெற subscribe செய்யவும்