ஆண்டவர் இன்று உன்னை அவருடைய சமாதானத்தின் கருவியாக மாற்றட்டும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் இன்று உன்னை அவருடைய சமாதானத்தின் கருவியாக மாற்றட்டும்

இன்று உன் ஜெபங்களை ஆண்டவரிடம் விசுவாசத்துடன் ஏறெடுக்க அழைக்கிறேன்.

அசிசியில் பிறந்த புனிதர் பிரான்சிஸ், ஆண்டவருக்காக எழுதியதாகக் கூறப்படும் அன்பின் பல அழகான வார்த்தைகள் பின்வருமாறு. இந்த ஜெபம், அனைத்து கிறிஸ்தவ பிரிவினர்களாலும் மிக விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது:

“இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்.
எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும்;
எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும்;
எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசுவாசத்தையும்;
எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கு நம்பிக்கையையும்;
எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும்;
எங்கு மனக்கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும்;
விதைத்திட அருள்புரியும்.

என் இறைவா,
ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும்;
புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும்;
அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரமருள்வாய்.
ஏனெனில்,
கொடுப்பதில் யாம் பெறுவோம்;
மன்னிப்பதில் மன்னிக்கப்பெறுவோம்;
இறப்பதில் நித்திய வாழ்வடைவோம்.
ஆமென்.”

கர்த்தர் உன்னை இன்று, அவருடைய சமாதானத்தின் கருவியாக மாற்றுவாராக.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!