விமானத்தில் ஒரு சிறந்த விமானி இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› விமானத்தில் ஒரு சிறந்த விமானி இருக்கிறார்!

நீ மோசமான வானிலை வழியாகக் கடந்து சென்றாலும் சரி அல்லது கண்கள் கூசும் அளவிற்கு சூரியன் பிரகாசித்தாலும் சரி, உன் வாழ்க்கையின் விமானத்தைப் பறக்க வைக்கும் ஒரு சிறந்த விமான ஓட்டி உனக்குத் தேவைப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் உன்னை சகல ஆபத்துகளுக்கும் விலக்கிக் காப்பாற்றி, உன் இலக்குக்கு நேராக உன்னை அழைத்துச் செல்லக்கூடியவராய் இருக்கிறார்!

“நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்” (வேதாகமத்தில் கலாத்தியர் 5:25ஐப் பார்க்கவும்)

உன் இலக்கை அடைய தேவனுடைய ஆவியானவரால் மட்டுமே உனக்கு உதவ முடியும்… நீ கடினமான இடங்கள் சிலவற்றைக் கடந்துபோக நேரிட்டாலும் கூட அவர் ஒருவரால் மட்டுமே உனக்கு உதவ முடியும் என்பதுதான் இதன் அர்த்தம். உன் கட்டுப்பாட்டை அவரிடம் ஒப்படைத்து உன் கண்களை அவர் மீது பதியவைப்பது மிகவும் முக்கியமாகும்.

ஒவ்வொரு நாளும் உனக்கு உதவ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம், உனக்கு முக்கியமற்றதாகத் தோன்றும் காரியத்திலும் கூட அவர் உனக்கு உதவ விரும்புகிறார், ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார். உன் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரமும் அவருடைய பார்வையில் கணக்கிடப்படுகிறது!

பரிசுத்த ஆவியானவர் உன்னை எப்போதும் சரியான பாதையில் வழிநடத்துவார். பயணம் முழுவதும், அவரது கரம் உன் மீதும், உன் வாழ்க்கையின் மீதும் இருக்கும். அவர் உனக்குப் போதித்து, நீ செல்ல வேண்டிய வழியைக் காட்டுவார். இது ஒரு வாக்குத்தத்தம்!

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” (வேதாகமத்தில் சங்கீதம் 32:8ஐப் பார்க்கவும்)

பரிசுத்த ஆவியானவர் உன் வாழ்க்கையின் பொறுப்பாளராக இருக்கும்போது நீ எதற்கும் பயப்படாதே, பெத்தானியா மற்றும் சாராள் எனக்கு எழுதியிருப்பது போலவே…

“சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். நான் 59 வயது நிரம்பியவள், என் பிள்ளைகளுக்கு நான் மட்டுமே பெற்றோராக இருந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் காலை வேளையில், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்காகக் காத்திருப்பேன். ஒவ்வொரு நாளும் என் ஆண்டவரை இன்னும் அதிகமாக விசுவாசிப்பதற்கு அது எனக்குக் கற்றுக் கொடுத்தது. என் வாழ்க்கைக்குப் பொறுப்பாளரான என் கர்த்தரிடத்தில் என் மனம் சமாதானத்துடன் காணப்படுகிறது. நாள் முழுவதும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். பெத்தானியா
“கடினமான ஒரு திட்டத்தை நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது, ஆனால் நான் பெற்றுக்கொண்ட ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற முதலாவது செய்தியானது ஆண்டவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதாகக் கூறியது. அது நான் நம்பிக்கையுடன் இருக்கவும் ஆண்டவருடைய கிருபையை நினைக்கவும் எனக்கு உதவியது… நான் அவரை நம்புவது சரிதான்.”
சாராள்

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “பரிசுத்த ஆவியானவரே, இதோ என் நாள், உமக்கு முன்பாக இருக்கிறது. என்னை வழிநடத்துவீராக… நல்லவைகளைத் தேர்வு செய்யவும், என் கண்கள் உம்மையே நோக்கியிருக்கவும் எனக்கு உதவுவீராக. ஒவ்வொரு நாளும் நீர் எனக்கு அளிக்கும் உமது உதவிக்காகவும் ஆதரவிற்காகவும் நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!