வாழ்க்கையில் போராட்டம் இருக்கும் என்பது உண்மைதான் 😓

முகப்பு ›› அற்புதங்கள் ›› வாழ்க்கையில் போராட்டம் இருக்கும் என்பது உண்மைதான் 😓

கடந்த சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தனிமையிலும் மௌனத்திலும் சற்று நேரம் செலவிட பயிற்சி செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது? உங்கள் இதயத்தில் உள்ள பயங்கள் அல்லது விருப்பங்களைப் பற்றி நீங்கள் புதிதாக எதையாவது வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?

ஒருவேளை நீங்கள் இந்தக் கருத்தை நினைத்து சற்றுத் தயங்கலாம் அல்லது அப்படிச் செய்வது முட்டாள்தனம் என்று நினைத்து, “இது மற்றவர்களுக்குப் பொருந்தும், ஆனால் எனக்குப் பொருந்தாது” என்று சொல்லலாம். இது இயல்பானதுதான்.

நீங்கள் ஒரு புதிய ஆவிக்குரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும்போது, குறிப்பாக தனிமை, மௌனம் போன்றவற்றை பயிற்சி செய்யும்போது ஒரு போராட்டத்தை சந்திக்க நேரிடலாம். ஏன்? ஏனென்றால், நீங்கள் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் பிரவேசிக்கிறீர்கள். சமாதானம், நம்பிக்கை மற்றும் ஆண்டவரை அறிந்துகொள்ளும் அறிவிலிருந்தது உங்களை விலக்கி வைக்க பொல்லாத கிரியைகள் அனைத்தும் ஒன்று கூடும்.

“தனிமையை நாம் நன்கு பயிற்சி செய்யும்போது, அது எப்போதும் அலுவலாக இருத்தல், அவசரப்படுதல், ஒதுக்கிவைக்கப்படுதல் மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவற்றின் பலத்தை வலுவிழக்கச்செய்யும். உலகம் உங்கள் தோள்களின் மீது மட்டுமே வைக்கப்படவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.” – டல்லஸ் வில்லார்ட்

நீங்கள் ஆண்டவருக்கு அருகில் நெருங்கிச் செல்வதையும், உங்களுக்காக அவர் வைத்திருக்கும் எல்லா நன்மைகளையும் அனுபவிப்பதையும் தடுக்க பிசாசு எப்போதும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்துக்கொண்டே இருப்பான்.

“தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.” (புலம்பல் 3:25-26,28)

நீங்கள் தனிமையிலும் மௌனத்திலும் பிரவேசிக்கும்போது சந்தேகமும் எதிர்ப்பும் அடிக்கடி எழும்பும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: முதலாவதாக, இந்தப் பயிற்சி வல்லமை வாய்ந்தது அல்ல என்றால், பிசாசு கடுமையாக எதிர்த்துப் போராடமாட்டான், இரண்டாவதாக, ஆண்டவர் மீதான உங்கள் விருப்பம் – அதாவது, இந்தப் புதிய ஆவிக்குரிய பயிற்சிக்கு நேராக உங்களை அழைத்துச்செல்வதற்கான விருப்பம் – உங்கள் சந்தேகங்கள் மற்றும் பயங்களை விட மிகவும் பெரியது.

தொடர்ந்து முன்னேறுங்கள் 💪🏼

நாம் தொடர்ந்து பயிற்சி செய்வோம்:

  1. ஒரு அமைதியான சூழலில், சற்று ஜாக்கிரதையாக உட்காரவும். உதாரணமாக, உள்ளங்கைகளை திறந்து வைத்துக்கொண்டு உட்காரவும், படுத்து தூங்கிவிட வேண்டாம்.
  2. கவனத்தை சிதறடிக்கும் காரியங்களை அகற்றவும். உங்கள் தொலைபேசியை அணைக்கவும் மற்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை நிறுத்தவும்.
  3. ஒரு சாதாரண இலக்கை வைத்துக்கொள்ளவும் – நீங்கள் நினைப்பதை விட இது சற்று கடினமானதுதான்! தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கடிகாரத்தில் டைமரை வைத்துக்கொள்ளவும்.
  4. உங்களுக்கு ஒரு எளிய ஜெப வாக்கியத்தைக் கொடுக்கும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள், உதாரணமாக, “இதோ நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள். உங்கள் மனம் அலைபாயும்போது, ஆண்டவர் மீது கவனம் செலுத்த அந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவும்.
  5. கர்த்தருடைய ஜெபத்துடன் இதை நிறைவு செய்யவும், (மத்தேயு 6:9-13) மற்றும் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் அல்லது எவ்வளவு அனுபவித்தீர்கள் என்பதை வைத்து உங்கள் நேரத்தை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.
unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!