வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா?

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவுமே நாம் பார்த்ததுபோல் இலவசமாக பெறக்கூடியவை; அதிலும் அவை எல்லா நேரத்திலும் பெறக்கூடியவைகளே… நம் மகிமையான இரட்சகராகிய இயேசு திரும்பி வரும்வரை அவை நிலைத்திருக்கும்! ஆம், ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களுக்கு காலாவதி நாள் என்கிற ஒன்று இல்லவே இல்லை!

இயேசுவின் காலத்தில், முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் மற்றும் விசுவாசிக்கிற அனைவருக்கும் அவை சொந்தமானவை என்பதை நீ கவனித்தாயா? அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 2:39-ல் இதைத்தான் நமக்குக் கூறுகிறார்: “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.”

அவர் குறிப்பிடும் இந்த வாக்குத்தத்தம் என்ன? இது பாவ மன்னிப்பின் வாக்குத்தத்தம்; அதே நேரத்தில் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாக்குத்தத்தமும் இதுவே! “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 2:38)

ஆண்டவர் உன் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாமல், “உன்னுடன் என்றென்றும் இருந்து” உனக்கு ஆறுதலளிப்பவரான தம்முடைய பரிசுத்த ஆவியானவரை உனக்கு அளிப்பதாக வாக்குப்பண்ணுகிறார். (யோவான் 14:16) இந்த ஆசீர்வாதத்தை இழந்துவிடாதே… இன்றே அதைப் பற்றிக்கொள்!

ஆம், ஆண்டவர்தாமே இன்று உன்னைத் தம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்புவாராக! இதுவே உனக்காக இயேசுவின் நாமத்தில் நான் செய்யும் ஜெபம். நீ அபரிவிதமாக ஆசீர்வதிக்கப்படுவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஆண்டவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசன வார்த்தையின் மூலம் என்னோடு பேசினார்; சில சமயங்களில் அதை விசுவாசிப்பது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம், கர்த்தர் தம்முடைய வார்த்தை /வாக்குத்தத்தம் உண்மையானது என்று உறுதிப்படுத்தியுள்ளார்; சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் வகையில் உங்கள் மூலமாகவும் ஆண்டவர் பேசுகிறார் என்பது நிதர்சனமான மற்றும் வெளிப்படையான உண்மை. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் எனக்கு ஊக்கம் கிடைப்பதால் நான் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கிறேன். எனக்காக இருப்பதற்கு “உங்களுக்கு” நன்றி.” (ரட்சிதா, அரியலூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!