வரலாற்றிலேயே இவர்தான் சிறந்த டச்சு நாட்டு பெண்மணி!

முகப்பு ›› அற்புதங்கள் ›› வரலாற்றிலேயே இவர்தான் சிறந்த டச்சு நாட்டு பெண்மணி!

என் மனைவி ஜெனி ஒரு டச்சு பெண்மணி என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் பாரபட்சமாக சொன்னாலும், அவள்தான் சிறந்த டச்சு பெண் என்று நான் நினைக்கிறேன்… 🤪 ஒருவேளை மற்றவர்களைக் கேட்டால், கோரி டென் பூம் தான் சிறந்த டச்சு பெண்மணி என்று சொல்ல வாய்ப்பு உண்டு.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் நாசிகளிடமிருந்து யூத மக்களைத் தப்பிக்க வைக்க அவர்களுக்கு உதவுவதற்காக கோரியும் அவரது குடும்பத்தினரும் தங்களுக்கு இருந்த எல்லாவற்றையும் பணயம் வைத்தனர். இறுதியில் அவர்கள் பிடிபட்டு வதை செய்யப்படும் ஒரு முகாமில் அடைக்கப்பட்டனர்; அங்கு பசி, கடுமையான குளிர், கட்டாய உழைப்பு, நோய் மற்றும் சுகாதாரமற்ற நிலைமைகளால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர்கள் துன்பங்களை சகிக்க வேண்டியிருந்தது. தனது தந்தையும் சகோதரியும் மோசமான நிலைமைகளால் இறப்பதை கோரி பார்த்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் அவமானப்படுத்தப்பட்டு, சிறைக் காவலர்களால் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மற்றவர்களின் கைகளால் கோரி அதிகம் பாதிக்கப்பட்டார். இருப்பினும், போருக்குப் பிறகு, அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, மன்னிப்புச் செய்தியைப் பிரசங்கித்தார். அவரது ஊழியம் படுகொலைக்கு தப்பிப்பிழைத்தவர்களுக்கும் அவர்களைத் துன்புறுத்தியவர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை எளிதாக்கியது.

அவள் ஒரு பயணத்தின்போது, தன்னை மோசமாக நடத்திய காவலர் ஒருவரை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“கோபமான, பழிவாங்கும் எண்ணங்கள் என்னுள் கொதித்தெழும்பினாலும்… ‘என்னை மன்னியும், மற்றும் அவரை மன்னிக்க எனக்கு உதவும்’ என்று நான் ஆண்டவரிடம் ஜெபித்தேன்… நான் எதையும் உணரவில்லை, அரவணைப்பு அல்லது அன்பின் சிறிய தீப்பொறிகூட எனக்குள் எழவில்லை. எனவே, மீண்டும், நான் ஒரு அமைதியான ஜெபத்தை முணுமுணுத்தேன். ‘இயேசுவே, என்னால் அவரை மன்னிக்க முடியவில்லை. உமது மன்னிப்பை எனக்குத் தாரும்’ என்று சொன்னேன். நான் அவரது கையைப் பிடித்தபோது, மிகவும் நம்பமுடியாத விஷயம் நடந்தது. என் தோள்பட்டையிலிருந்து என் முழங்கை வழியாகவும், என் கை வழியாகவும், என்னிடமிருந்து ஒரு மின்னோட்டம் போன்ற உணர்வு அவருக்குள் பாய்ந்து சென்றதுபோல் உணர்ந்தேன், அதே நேரத்தில் என் இதயத்தில் அந்த நபர் மீது ஒரு அன்பு உண்டானது, அது கிட்டத்தட்ட என்னை நிரப்பியது.” (Corrie ten Boom எழுதிய ‘The Hiding Place’ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)

மன்னிப்பு என்பது ஆண்டவருடைய கட்டளை (எபேசியர் 4:32) அதை பின்பற்றுவதற்கான பலத்தை ஆண்டவர் நமக்கு கொடுப்பார். சில நாட்களுக்கு முன் எழுதிய பெயர் பட்டியலைப் பார்த்து, கோரி அவர்கள் செய்த ஜெபத்தை நாம் சேர்ந்து சொல்வோம்: “இயேசுவே, என்னை மன்னியும், மற்றும் இவரை மன்னிக்க எனக்கு உதவுவீராக. என்னால் இந்த நபரை மன்னிக்க முடியவில்லை; தயவுசெய்து உமது மன்னிப்பை எனக்குத் தாரும்.”

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!