வசந்த காலம் வந்துவிட்டது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› வசந்த காலம் வந்துவிட்டது!

நம் வாழ்நாளில் நாம் பல பருவ காலங்களை கடந்து செல்கிறோம். சில பருவ காலங்கள் மற்றவைகளை விட மிகவும் கடினமாக இருக்கும், வெயிலை போல. வசந்த காலம் அல்லது மழைக்காலம் வருமா என்று நாம் சந்தேகப்படும் அளவிற்கு வெயில் காய்ந்துவிடும்.

உதாரணத்திற்கு, மழைக்கு பின் வரும் வசந்த காலத்தில் ஒரு பெரிய படர்ந்த புல்வெளி அதன் முழு மகிமையோடு தோன்றுகிறது. அங்கே வண்டுகளும் வண்ணத்து பூச்சிகளும் ரீங்காரம் செய்கின்றன, பறவைகள் பாடுகின்றன, அந்த இடமே உயிரோட்டமான, கலகலப்பான இடமாக இருக்கிறது. ஆனால் அதே இடத்திற்கு சில மாதங்கள் கழித்து நாம் வந்து பார்க்கும் போது ஒரு அசைவும் இல்லாமல் வெயிலினால் எல்லாம் காய்ந்து இருப்பதை பார்க்கமுடிகிறது.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இப்படி ஏதாவது “உயிரில்லாத” அல்லது “காத்திருப்பின்” பருவ காலத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் எந்த காலகட்டத்தில் இருந்தாலும் சரி, நீங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஏன்னென்றால் இயேசு இவ்வாறு சொல்கிறார், “இதோ, “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ” (வேதாகமம் மத்தேயு 28:20) 

அதனோடுகூட,  கனிகொடுக்கும் ஒரு பருவக்காலத்திற்குள், அவருக்கென்று நற்கனிகொடுக்கும் ஒரு காலகட்டத்திற்குள் நீங்கள் நுழைய ஆண்டவர் விரும்புகிறார், 

“நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போல்  இருப்பான்/இருப்பாள். அவன்/அவள் செய்வதெல்லாம் வாய்க்கும். (வேதாகமம், சங்கீதம் 1:3)

நான் உங்கள் வாழ்க்கையின் மீது இதை அறிக்கையிடுகிறேன்…..வசந்த காலம் விரைவில் வருகிறது. அது வெகு தொலைவில் இல்லை!! முதலில் முளைக்கும் மொட்டுகளைப்போல, பூமியிலிருந்து வெளியேறும் முதல் தளிர்களைப்போல, அந்த நேரம் வரும்போது, நீங்களும் ஆண்டவருடைய வசந்த காலத்தை அனுபவிப்பீர்கள்!

நீங்கள் ஒரு புதிய பருவகாலத்திற்குள் நுழைய ஆண்டவர் விரும்புகிறார். நம்பிக்கையோடும் பொறுமையுடனும் காத்திருங்கள்… ஆண்டவரே அதை செய்து முடிப்பார் !

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!