ரஜினியுடன் பழக வேண்டுமா? 🕺🏻
முகப்பு ›› அற்புதங்கள் ››
நாம் சந்திக்கவே முடியாத மனிதர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். சிலர் நாம் போக முடியாத தூரத்தில் வாழ்வதால் நாம் அவர்களை சந்திக்க முடிவதில்லை, இன்னும் சிலரை நாம் நெருங்கவே முடிவதில்லை. உதாரணமாக, நாங்கள் இந்தியாவில் வசித்துக்கொண்டிருந்தபோது, நாங்கள் வழக்கமாக காரில் ரஜினியின் வீட்டின் வழியாகவே செல்வதுண்டு, ஆனால் நாங்கள் அவரைப் பார்த்ததே இல்லை 🤷🏻♂️.
இதைப்போலவே, பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான ஆண்டவர், நாம் நெருங்க முடியாத ஒருவராக இருந்திருக்கலாம். ஆனால் பரிசுத்தமும் மகத்துவமும் நிறைந்த ஆண்டவர், ஒரு சாதாரண குறையுள்ள மனிதன் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக இருக்க விரும்புவது ஏன்?
மேலும்… ஆண்டவருடைய இதயத்தின் உள்ளான விருப்பம் என்னவென்றால், ஒவ்வொரு நபருடனும், மனதளவில் நெருங்கிப் பழகி, தனிப்பட்ட விதத்தில் நன்கு உறவைப் பேண வேண்டும் என்பதே ஆகும்.
செப்பனியா 3:17ல் ஆண்டவர் கூறுகிறார்:
- அவர் உங்கள் அருகில் இருக்கிறார்
- உங்களை இரட்சிக்க விரும்புகிறார்
- உங்களில் களிகூருகிறார்
- உங்களைக் கடிந்துகொள்வதில்லை
- தம் அன்பினால் உங்களை சாந்தப்படுத்துகிறார்
- மகிழ்ச்சியான பாடல்களால் உங்கள் மீது களிகூருகிறார்
உங்களுக்கும் எனக்கும் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, வல்லமை வாய்ந்த பிரபலமான ஒருவரை அறியும் மகத்தான பாக்கியம் உள்ளது: அவர்தான் நமது பரலோகப் பிதா.
இந்த உறவைப் பேணும்படி, தம்முடைய ஒரே குமாரன், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கவும், தம்மை அறிந்துகொள்ள வழி உண்டாக்கவும் அவரை இவ்வுலகிற்கு அனுப்ப ஆண்டவர் தயங்கவில்லை.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” – யோவான் 3:16
“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார். – யோவான் 14:6
இன்று ஆண்டவர் உங்களைத் தமக்கு அருகில் அழைத்துக்கொள்வதன் மூலம் அவர் உங்களுக்கு அருகில் நெருங்கி வரட்டும். உங்கள் கரங்களை விரித்து ஜெபியுங்கள்: “பரலோகத் தகப்பனே, நான் உம்மை நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்; இதோ என்னை அர்ப்பணிக்கிறேன்.”
