மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதலின் அடிப்படை சட்டநெறி அமைப்பு என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதலின் அடிப்படை சட்டநெறி அமைப்பு என்ன?

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” (ஏசாயா 53:4-5)

இந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ள பாடுகள் மற்றும் துக்கங்கள் ஆகியவை நேரடியாக வியாதியுடன் தொடர்புடையவை. நம்முடைய துக்கங்களை அவர் சுமந்தார்… இயேசு அவற்றைச் சுமந்தார், அவர் தேவனால் அடிக்கப்பட்டார் என்று நாம் எண்ணினோம். நண்பனே/ தோழியே, உன் துக்கங்களை இயேசு சுமந்துவிட்டார், உன் நோய் மற்றும் பலவீனம் யாவற்றையும் இயேசு சுமந்து தீர்த்தார். உன் மீறுதல்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் அவர் காயப்பட்டு நொறுக்கப்பட்டார் … உன் பாவ மன்னிப்புக்கான விலைக்கிரயத்தை அவர் முழுமையாக செலுத்திவிட்டார்.

இந்த வசனம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அது சிலுவையில் இயேசு நிறைவேற்றின கிரியையை உன் நோய்க்கான தீர்வுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துகிறது… “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.”

இது நமது பாவங்களுக்கான மன்னிப்பையும் உள்ளான மனதின் பிரச்சனைகளுக்கான தீர்வையும் கொண்டுள்ளது… “நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.”

இயேசு உனக்காக முழு விலைக்கிரயத்தையும் செலுத்திவிட்டதால் நீ தேவ சமாதானத்தைப் பெற்றுள்ளாய்! அவர் உன் நோய்களையும் அக்கிரமங்களையும் சுமந்துகொண்டு, சிலுவையில் தொங்கி மரித்ததால், உன் ஆத்துமாவிற்கான மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் உட்பட எல்லா வகையான குணப்படுத்துதலையும் நீ பெற்றுக்கொள்ளலாம்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது… எனக்கு 4-வது நிலை புற்றுநோய் உள்ளது. உங்களது தினசரி மின்னஞ்சல்களின் செய்திகள், நான் தொடர்ந்து போராடுவதற்கும், இயேசுவின் அன்பைப் பற்றி மேலும் அறியவும், எனக்கு மனத்தெளிவு உண்டாக்கவும், என்னை ஊக்குவிக்கவும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. நன்றி.” (மோனிகா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!