பயப்படாதே!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” (யோசுவா 1:9)
உன் உணர்வுகள் யாவற்றையும் கர்த்தர் அறிவார்; நாம் பயப்படுவோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டம் நமக்கு மிகப்பெரியது என்றாலும் கூட, பயத்தினால் நாம் பின்வாங்கக் கூடும் என்பது அவருக்குத் தெரியும்.
பயத்திடம் தஞ்சம் அடையாதே… ஆண்டவரிடம் தஞ்சமடைவாயாக!
வேதாகமத்தின்படி உண்மையில், பயம் என்பது பாவத்தின் முதல் விளைவுகளில் ஒன்றாகும். இதனிமித்தம் நாம் ஆண்டவரிடமிருந்து பிரிந்துவிட்டோம்: “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்” என்று ஆதாம் கூறினான். (ஆதியாகமம் 3:10)
உன்னை பயமுறுத்துவதுதான் பிசாசின் தந்திரம். அவன் கெர்ஜிக்கிற சிங்கத்தைப்போல சுற்றித்திரிகிறான் என்று வேதாகமம் சொல்கிறது.
- பயம் முடக்குகிறது.
- பயம் யதார்த்தத்தை சிதைக்கிறது.
- பயம் சரியான முடிவுகளை எடுப்பதைத் தடுக்கிறது.
- பயம் நம்மை முன்னோக்கிச் செல்லவிடாமல் பின்வாங்க வைக்கிறது.
- ஆண்டவர் உன் வாழ்விற்காக கொண்டிருக்கும் அற்புதமான திட்டத்திற்குள் நீ நுழைவதை பயம் தடுக்கிறது.
ஒரு தாலந்தை பெற்றுக்கொண்ட இந்த மனிதன், பயந்துபோய் அதை மறைத்து வைத்ததால் கிடைத்த பலனைப்போல, அது நமக்குச் சரிக்கட்டுகிறது. “ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.” (மத்தேயு 25:25)
அப்படியானால், உன் பயங்களை நீ எவ்வாறு மேற்கொள்ளுவாய்?
- பயத்திற்கான ஆதாரத்தை கண்டுபிடி. ஆண்டவர் உனக்காக ஆயத்தம் செய்துள்ள இடத்திற்குச் செல்வதைத் தடுப்பது, மனிதர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமா? அல்லது அவர்களே ஆண்டவர் உனக்குத் தயார் செய்துள்ள இடத்திற்குச் செல்வதைத் தடுக்கிறார்களா, அல்லது உன்னை முன்னோக்கிச் செல்லவிடாமல் தடை செய்கிறார்களா? வேதாகமம் அறிவிக்கிறது: “நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?” (ஏசாயா 51:12)
- பிறகு, உன் பயத்தை ஆண்டவரிடம் அறிக்கை செய். மறந்துவிடாதே: பயமுறுத்துவது எதுவாக இருந்தாலும் சரி, பயப்படாதே என்று வேத வார்த்தையில் அறிவிக்கப்பட்டுள்ளது! தைரியமாக நில்… ஆண்டவர் உன் பயத்தை முறியடிப்பார், அவர்தான் உன்னைப் பலப்படுத்துகிறார் என்று அறிக்கையிடு. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 54:17)
இன்று யுத்தம் கர்த்தருடையது, அது வேறு யாருக்கும் சொந்தமானது அல்லவென்று அறிவிப்பதற்கான தைரியம் உனக்குக் கிடைக்குமாறு நான் ஜெபிக்கிறேன்! நீ பயப்படாமல் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு, உன் தலையை உயர்த்தி தொடர்ந்து முன்னேறுவாயாக.
புதியதும் நீ அறியாததுமான ஒன்றை செய்யுமாறு ஆண்டவர் உன்னை அழைக்கும்போது, பயப்பட வேண்டாம் என்று ஆண்டவர் உனக்கு நினைவூட்டுகிறாரா? இந்த வார்த்தைகள் இன்று உனக்கு ஆறுதலாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கட்டும்.