பந்தி ஆயத்தமாயிற்று

முகப்பு ›› அற்புதங்கள் ›› பந்தி ஆயத்தமாயிற்று

“என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி” (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 23:5ஐ பார்க்கவும்)

ஒரு நாள், “கர்த்தர் சாத்தானை நோக்கி: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ?” என்று கேட்டார் (பரிசுத்த வேதாகமத்தில் யோபு 1:8ஐ பார்க்கவும்)

யோபு தேவனுடைய பிள்ளையாகவும், உத்தமனாகவும், சன்மார்க்கனாகவும், கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகுகிறவனாகவும் இருந்ததால், தேவன் யோபுவின் நிமித்தம் பெருமிதம் கொண்டார்.

சாத்தான் பொறாமையடைந்தவனாய், கோபத்துடன் யோபுவை பயங்கரமாக சோதித்தான்; சரீர ஆரோக்கியம் முதற்கொண்டு அவனிடமிருந்த எல்லாவற்றையும் அவன் பறித்துவிட்டான்.

ஆனால் யோபுவை தேவன் மீட்டுக்கொண்ட பின்பு, அவனது குடும்பத்தையும், பொருட்களையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் ஆண்டவர் திரளாய் பெருகச் செய்தார்.

தேவன் எதிராளியாகிய பிசாசைப் பார்த்து, “சகோதரர் மீது கடுமையாய் குற்றஞ்சாட்டுகிற பிசாசே, நீ தோற்றுப் போனாய்! எனது பிள்ளையாகிய யோபு ஜெயித்துவிட்டான், உன் கண்களுக்கு முன்பாக யோபுவிற்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்திவிட்டேன், அவனை எப்படி ஆசீர்வதிக்கிறேன் என்பதைப் பார்” என்று சொல்லியிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.

தேவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கவே விரும்புகிறார் என்று நான் என் முழு மனதோடு விசுவாசிக்கிறேன். அவர் நம்மை மீட்கவும், நம்மை ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார். குறிப்பாக இதை வாசித்துக் கொண்டிருக்கிற உன்னை அவ்வாறே ஆசீர்வதிக்க விரும்புகிறார்.

ஆம், உனது சத்துருக்களுக்கு முன்பாக உனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறார். உனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவது தேவனாக இருக்கும்பொழுது, நீ எல்லா ஆபத்துக்கும் விலகி இருப்பது மாத்திரமல்ல, நீ ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுகிறாய்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக:எப்போதும் ‘நீ ஒரு அதிசயம்’ என்று முடியும் ஊக்கமளிக்கும் செய்திகளுக்காக நன்றி. சிறுவயதிலிருந்தே, நீண்டகாலமாக எனக்கு நேர்ந்த முறைகேடுகள் கொடுமைகள் மற்றும் நாள்பட்ட நோய் நிமித்தமாக நான் உயிரோடு இருப்பதற்காக நன்றி சொல்லத் தோன்றியதில்லை. என்னை ஒரு அதிசயம் என்று சொல்லி ஊக்கப்படுத்தும் உங்கள் வார்த்தைக்கு நன்றி. நான் ஒரு சிறையில் வேலை பார்க்கிறேன். இங்கே கடந்த மாதம் நடந்த கூடார எழுப்புதல் விழாவில் நானும் எனதுக் கணவரும் குடும்பமாக பங்கு வகிக்க தேவன் கிருபை செய்தார். அறுவடையின்போது, அநேகர் தேவனிடத்தில் திரும்புவதைப் பார்க்க முடிந்தது. இந்த எழுப்புதலின் காலத்தில் உயிருடன் இருப்பதும், அதில் பங்கு வகிப்பதும் எத்தனை பெரிய பாக்கியம்! என்னை உயிரோடு வைத்திருப்பதற்காக நன்றி இயேசுவே!” (மேகலா).

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!