நீ வெற்றி பெற விரும்புகிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ வெற்றி பெற விரும்புகிறாயா?

உனக்காக கர்த்தரிடமிருந்து வரும் இந்த வார்த்தைகளைத் தியானிக்க உன்னை அழைக்கிறேன்:

“நீ எப்படிப்பட்ட வெகுமதிக்காக வேலை செய்கிறாய்?

சம்பாதிப்பதற்காக நீ என்ன கிரீடத்தை அணிந்திருக்கிறாய்?

அது அழிந்துபோகும் கிரீடமா அல்லது அழியாமல் நிலைத்திருக்கும் கிரீடமா?

காலத்தால் அழிந்துபோகாத வெற்றி, உண்மையான வெற்றி என்னிடமிருந்து வருகிறது.

இந்த உலகமானது உடைமைகளிலும் புகழிலும் மதிப்பைக் காண்கிறது, ஆனால் நானோ மறுவாழ்வளித்தல், குணப்படுத்துதல் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறேன்.

நான் உனக்கு ஊக்கமளித்து, என்னிடம் உள்ளவற்றால் உன்னை நிரப்பட்டும்.

யோசேப்பு, தானியேல், நெகேமியா ஆகியோரைக் கவனி.

என் ஆவியின் மூலம் அவர்கள் ஞானமுள்ள ஆலோசனைகளை வழங்கினர், மற்றும் சரியான முடிவுகளை எடுத்தார்கள்…

நான் செய்வது வெற்றியடையும்.

நான் ஆசீர்வதிப்பது கனிகளைத் தரும்.

நான் ஜீவனை அளிக்க அவைகள் பெருகும்.

உனக்காக நான் நிறைய வைத்து வைத்திருக்கிறேன்…

எனவே என்னுடன் நேரம் செலவிடுவாயா?

ஒரு தந்தையைப்போல, நான் உனக்கு வழிகாட்ட விரும்புகிறேன்,

உனக்குக் கற்றுக் கொடுப்பதோடு, உன்னுடன் சேர்ந்து நடப்பேன்.

என் வார்த்தையையும், என் ஆவியையும் சார்ந்திரு.

நீ மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படி, உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் என் கரத்தில் வைத்துவிடு!”

குறிப்புகள்: சங்கீதம் 128:1-2, பிரசங்கி 2:24, தானியேல் 1:19-21, ஆதியாகமம் 41:39

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!