நீ ரொம்ப சோம்பேறியாக இருக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ரொம்ப சோம்பேறியாக இருக்கிறாயா?

விடுமுறை நாட்களில் நீ சிறிது நேரம் ஓய்வெடுத்திருப்பாய். இன்னும் உன் இயல்பு வாழ்க்கைக்கு நீ திரும்பவில்லை என்றால், உன் வேலை அல்லது படிப்பை நாளை முதல் மீண்டும் தொடங்குவாய் என்று நான் நினைக்கிறேன்.

நீ வழக்கமான உன் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதால், உன் ஆண்டின் ஆரம்ப நாட்களை நன்றாகத் தொடங்க, நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து பகிர்ந்துகொள்ளும்படியான ஒரு சிறந்த ஆலோசனை என்னிடம் உண்டு, அது: ‘நீ சோம்பேறியாக இருப்பதை விட்டுவிடு 🥱‘ என்ற ஆலோசனைதான்.

“இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.” (நீதிமொழிகள் 6:10-11)

சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து, கடின உழைப்பை ஊக்குவிக்கும் சில வசனங்கள் நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ளன:

  • “சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” (நீதிமொழிகள் 14:23)
  • “தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.” (நீதிமொழிகள் 20:13)
  • “சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.” (நீதிமொழிகள் 20:4)

கடின உழைப்பையும், நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இருப்பினும், ஓய்வுக்கும் சோம்பலுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்க வேண்டியது அவசியம். ஓய்வு என்பது ஆண்டவரிடமிருந்து கிடைத்த பரிசு மற்றும் அவருடைய மகிமைக்காக நாம் அனுசரிக்கக்கூடிய ஒரு வேதாகமக் கோட்பாடாக இருக்கிறது, ஆனால் சோம்பல் என்பது சுயத்தை திருப்திப்படுத்துவதாய் இருக்கிறது.

இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை நீ எவ்வாறு வேறுபடுத்தலாம் என்பதை நாம் இங்கே காணலாம்:

  • ஓய்வுக்கு ஒரு சீரான பிரமாணம் உண்டு (எ.கா. இரவு நேர ஓய்வு அல்லது ஏழாம்நாள் ஓய்வு), ஆனால் சோம்பேறித்தனமோ நமது சிறந்த நியாயத்தீர்ப்புக்கு எதிராக செயல்படுகிறது.
  • ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது; அது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் உணர வைக்கிறது, அதே நேரத்தில் சோம்பேறித்தனமானது நம்மை இன்னும் சோம்பலாக ஆக்கிவிடுகிறது.
  • ஓய்வு என்பது ஆண்டவரை நமக்கு நினைவூட்டுகிறது, மற்றும் ஜீவனுக்கு நேராக வழிநடத்துகிறது; ஆனால், சோம்பேறித்தனமானது, சமூக ஊடகங்களில் மூழ்கச் செய்து, தொடர்ந்து மொபைல் திரையை நகர்த்த வைத்து, நம்மை ஆண்டவரிடமிருந்து விலக்கிவிடுகிறது.
  • ஓய்வு உற்பத்தித்திறனுக்கும் பெருக்கத்துக்கும் வழிவகுக்கிறது, அதேசமயம், சோம்பேறித்தனமானது காரியங்களை மிகவும் தாமதமாக நடக்கச் செய்கிறது.

சோம்பேறியாக இருப்பதை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக ஆண்டவருடைய இளைப்பாறுதலை நாடுமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன்! ஆண்டவரது சமூகத்தில் இளைப்பாற நேரம் ஒதுக்கு, நீண்ட நேரம் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டும் என்ற உன் எண்ணத்தை எதிர்த்துப் போராடி ஜெயம் பெறுவாயாக!

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!