நீ பரலோகத்தின் நற்கந்தமாய் பூமியில் இருக்கிறாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ பரலோகத்தின் நற்கந்தமாய் பூமியில் இருக்கிறாய்!

“உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?” (வேதாகமத்தில் லூக்கா 14:34ஐப் பார்க்கவும்).

  • நீ உப்பாயும், பூமிக்கு சாரமாயும் இருக்கிறாய்.
  • நீ இந்த உலகத்தின் இருளை அகற்றும் ஒளியாய் இருக்கிறாய்.
  • நீ இந்த உலகில் கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற தனித்துவமான அந்தஸ்தைப் பெற்று, பூமியில் பரலோகத்தின் தூதராய் இருக்கிறாய்.
  • அன்பு உன் செயல்களை வழிநடத்துகிறது, மேலும் உன்னில் பிரகாசிக்கிற இயேசுவின் சாயலைக் கண்டு உன் அண்டை அயலவர்கள் ஸ்தம்பித்து நிற்கிறார்கள்.
  • தேவனுடைய ஜீவன் உன்னை நிரப்புவதால், உன் சக ஊழியர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
  • நீ தீமைக்குப் பதில் நன்மை செய்யும் ஒருவராகவும், அவதூறுகளை மன்னித்தும் பதிலளிப்பதால், இந்த உலகம் உன் வாழ்வில் உள்ள இயேசுவின் உண்மையான ஜீவனுள்ள சாட்சியைப் பார்க்கிறது.

உன் ஒவ்வொரு செயலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஏனென்றால் ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் அச்சு அடையாளத்தைக் கொண்டுள்ளது. நீ பூமியில் பரலோகத்தின் ஸ்தானாதிபதியாகவும் நற்கந்தமாயும் இருக்கிறாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!