நீ பயப்படுகிறாயா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
கர்த்தர் உனக்காக வைத்திருக்கிறார் என்று நான் நம்புகின்ற இந்த சிறப்புச் செய்தியை இன்று நீ பெற்றுக்கொள்ளும்படி உன்னை அழைக்கிறேன்.
“நீ பயப்படுகிறாயா?
உன் இதயத்தின் வாசலில் பயம் நின்றுகொண்டிருக்கிறதா?
அதை உள்ளே வர விடாதே… என்னை நம்பு.
ஒவ்வொரு சூழ்நிலையிலும், உன் கண்களை என் மீது நிலையாக வைத்திரு.
நான் உனக்கு அசைக்க முடியாத விசுவாசத்தை அளிக்க விரும்புகிறேன்,
உன் பயம் மற்றும் சந்தேகங்களை மேற்கொள்ளும் என் மீதான ஒரு நம்பிக்கையை உனக்குத் தர விரும்புகிறேன்.
நீ எதிர்கொள்ளும் எந்தச் சூழ்நிலைகளையும் விட,
என் அன்பு வலிமையானது, என் அன்பு பெரியது என்ற உறுதியைத் தர விரும்புகிறேன்!
இதனால்தான், சந்தேகம் உன் இதயக் கதவைத் தட்டும்போது,
திறக்காதே! உறுதியுடனும் அதிகாரத்துடனும் என் வார்த்தையை அறிக்கையிடு.
நான் மாறாதவர் என்றும், நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றும் அறிக்கையிடு!
அல்பாவும் ஒமேகாவுமாய், ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் என்று அறிக்கையிடு.
நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றும் தேவைகளைச் சந்திப்பவர் என்றும்,
மீட்பர் என்றும் ஆறுதல் அளிப்பவர் என்றும் அறிக்கையிடு.
நீ எனக்கு வேண்டும், நானே உன்னை உருவாக்கினேன்!
நான் வாக்களித்ததை உன்னில் நிறைவேற்றுவேன்; நான் சொன்னதைச் செய்வேன்.
நான் பொய் சொல்ல மனிதனும் அல்ல, மனந்திரும்புவதற்கு மனுபுத்திரனும் அல்ல.
விசுவாசத்தோடும், சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் இரு.
நான் உன் பிதா, உன் நண்பன் மற்றும் உன் ராஜா.
நான் உன்னைக் கைவிடமாட்டேன்.”
வேதாகமக் குறிப்புகள்: எண்ணாகமம் 23:19, யாத்திராகமம் 15:26, வெளிப்படுத்தின விசேஷம் 22:13, சங்கீதம் 139:16
