நீ செயல்படும் நபராய் இருக்கிறாயா அல்லது உறவை நாடும் நபராய் இருக்கிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ செயல்படும் நபராய் இருக்கிறாயா அல்லது உறவை நாடும் நபராய் இருக்கிறாயா?

நான் எழுதிய வேத தியானங்களை நீ வாசித்திருப்பாயானால், நான் “தனிப்பட்ட உறவுகளை” நாடுவதை விட “திட்டங்கள் மற்றும் காரியங்களை செயல்படுத்துவதில்” இயல்பாகவே அதிக கவனம் செலுத்துகிறேன் என்பதை உன்னால் அறிந்துகொள்ளமுடியும். ஆனால் ஆண்டவர் உண்மையிலேயே என் வாழ்க்கைப் பாதையின் போக்கை மாற்றிவிட்டார்.

இவ்விஷயத்தில் நீ எப்படி இருக்கிறாய்? ஆண்டவருடனான உன் உறவைப் பற்றி சில சமயங்களில் நீயும் இப்படி நினைக்கிறாயா?

  • “இன்று நான் ஆண்டவருக்கு என் நேரத்தை போதுமான அளவு கொடுக்கவில்லை!”
  • “வேதாகமத்தை நான் இன்னும் அதிகமாகப் படித்திருக்கலாம்!”
  • “நான் இன்று 10 நிமிடம் கூட ஜெபிக்கவில்லை!”

ஆண்டவருடன் இணைந்து வாழ்வது என்பது வெளிப்புறமாக செயல்படும் காரியம் அல்ல… மாறாக அது அவருடன் நீ கொண்டிருக்கும் உறவு சம்பந்தப்பட்ட விஷயம். இதை விட அதிகமாக ஆண்டவர் உன்னிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

ஆண்டவர் உன் தரப்பிலிருந்து அதிக ஜெபங்களையோ, செயல்பாடுகளையோ மற்றும்‌ பல காரியங்களையோ மட்டுமே தேடுவதில்லை. நிச்சயமாக, அவருக்கு அருகில் நெருங்கி வரவும் அவரை நன்கு அறிந்துகொள்ளவும் இவை உனக்கு உதவக்கூடும். ஆனால் “நீ செய்யும் இந்தச் செயல்களை” விட ஆண்டவர் உன்னைத்தான் அதிகம் விரும்புகிறார்.

சி.எஸ். லூயிஸ் என்ற எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “ஆண்டவர் நம்மிடமிருந்து எதையும் விரும்புவதில்லை. அவர் நாம் இருக்கிற வண்ணமாகவே நம்மை விரும்புகிறார்.

ஆண்டவருக்கு நீதான் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் உன் இருதயத்தைத்தான் தேடுகிறார். அவர் உன்னுடன் மேலோட்டமாக அல்ல; மிகவும் ஆழமாக ஐக்கியங்கொள்ள விரும்புகிறார்.

உன்னை முற்றிலும் ஆண்டவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று வேதாகமம் ஊக்குவிக்கிறது: “… உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.” (ரோமர் 6:13) அதுவே ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது. நீ எதையெல்லாம் சாதிக்கிறாய் என்பது அவருக்கு முக்கியமல்ல; நீ ஆண்டவருடன் இருக்கிறாய் என்பதுதான் பிரதானமானது. ஆண்டவர் உன்னுடன் நெருங்கி உறவாட விரும்புகிறார். அதுவே அவரது விருப்பம். ஒவ்வொரு நாளும் அவருடன் நெருங்கி ஜீவிப்பது நமது பழக்கங்களில் ஒன்றாக மாற நான் உனக்காக ஜெபிக்கிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!