நீ களைத்துப்போயிருந்தால், சற்று இளைப்பாறு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ களைத்துப்போயிருந்தால், சற்று இளைப்பாறு!

உன் பெற்றோர், மனைவி, உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் அல்லது நண்பர்கள் – இவர்களில் ஒருவரை நீ எவ்வளவு அதிகமாக நேசித்தாலும் – அவர்கள் உன்னைக் கோபப்படுத்தக் கூடும், அப்படித்தானே? ஒருபுறம், நீ அவர்களுக்காக வலிகளை ஏற்றுக்கொள்பவராக இருந்தாலும், மறுபுறம் அவர்கள் உன்னைப் பைத்தியமாக்குமளவிற்கு நடந்துகொள்ளலாம். நாம் நேசிப்பவர்கள் நம் மீது கோபப்படுவது சாதாரணமானதுதான்; நாம் அனைவரும் மனிதர்களே.

ஆண்டவரோ ஒரு மனிதர் அல்ல; அவர் ஆண்டவர்! 😉 நாம் எவ்வளவு பேசினாலும், அவருடன் பகிர்ந்துகொண்டாலும் அல்லது அவரிடம் எவ்வளவு கேட்டாலும், அவர் ஒருபோதும், நம்மைக் குறித்து சோர்ந்துபோகமாட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவரைத் தொந்தரவு செய்யும்போது, அது அவரைத் தொந்தரவு செய்யாது! உண்மையில், அவர் அதை விரும்புகிறார்!

“கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்;
என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே,
இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.”
– சங்கீதம் 139:1-6

ஆண்டவர் தமது சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு, அன்பு நிறைந்த கண்களால் உன்னைப் பார்க்கிறார், உன் ஒவ்வொரு அசைவையும் பார்க்க ஆவலாய் இருக்கிறார், நீ அவரிடம் ஜெபிக்கும்போது உன் குரலைக் கேட்கக் காத்திருக்கிறார் என்பதை சற்று கற்பனை செய்துபார்.

ஆண்டவர் உன்னைக் குறித்து ஒருபோதும் சோர்வடையமாட்டார், மேலும் அவர் உன்னைப் பார்த்து, ‘போதும் நிறுத்து’ என்று ஒருபோதும் சொல்லமாட்டார். அவர் தமது பரிபூரணமான அன்பை, அதாவது, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எல்லையற்ற, ஏராளமான அன்பை உன்மீது பொழிய விரும்புகிறார்.

இன்று ஆண்டவருடைய அன்பின் புதிய வெளிப்பாட்டிற்காக நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “பரலோகத் தகப்பனே, என் மீது நீர் பொழிந்தருளும் உமது ஆச்சரியமான, பரிபூரண அன்பிற்கு நன்றி. உமது பரிசுத்த ஆவியானவர் மூலம் உமது அன்பினால் என்னை மீண்டும் நிரப்புவீராக, ஆமென்.”

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!