நீ ஒரு வைரக்கல்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒரு வைரக்கல்!

விலைமதிப்பற்ற கற்கள்களில் வைரக்கல்லை ராஜா என்று கூறுவதுண்டு. இது மிகவும் அரிதானதும், அதன் அழகின் நிமித்தமாக அனைத்து ரத்தினங்களிலும் மிகவும் அதிக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டதும் மிகவும் உயர்வாகக் கருதப்பட்டதுமாய் இருக்கிறது. இருப்பினும், இந்த அற்புதமான நகையை முதலில் பிரித்தெடுக்கும்போது, ஒரு கரடுமுரடான, சாதாரண பாறைபோல் காணப்படுகிறது.

இந்தக் கல்லானது பிரத்தியேகமான ஒரு ரத்தினமாக மாறுவதற்கு நேரமும், கவனமும் மற்றும் உண்மையான நிபுணரின் நிபுணத்துவமும் தேவைப்படுகிறது.

நீ தான் இந்த வைரம்! நீதான் இந்த விலையேறப்பெற்ற கல். இந்த பிரத்தியேகமான ரத்தினம், அதன் சிருஷ்டிகரின் மகிமையைப் பிரதிபலிக்க அழைக்கப்படுகிறது.

உன்னை வடிவமைப்பதற்காக, தேவன் நேரத்தையும் உன் வாழ்க்கையின் சூழ்நிலையையும் பயன்படுத்துகிறார். அவர் உன்னைப் பண்படுத்துவதற்கான நேரத்தை எடுத்துக்கொள்கிறார், அதனால் அவர் உன்னை அழைத்திருக்கும் அழைப்பிற்கு ஏற்ற நபராய் நீ மாறுவாய்.

எனவே, முதல் பார்வையில் சோதனையாகவோ, தடையாகவோ அல்லது தாமதமாகவோ தோன்றுவது உண்மையிலேயே கர்த்தருடைய கரங்களில் ஒரு கருவியாக இருக்கிறது!

தேவனுடைய மகிமைக்காக, ஜொலிக்கும் வெளிச்சமாகப் பிரகாசிக்க ஆயத்தமாக உள்ள இந்த வைரம் நீதான்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!