நீ ஒரு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக இருக்கிறாய்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஒரு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக இருக்கிறாய்

பரலோகங்கள் இன்று திறந்திருக்கின்றன!, அவை உன் வாழ்க்கைக்காக திறந்திருக்கின்றன. பரலோகத்திலிருந்து மழை உன் விதியின் மீதும் கனவுகளின் மீதும் பாய்ந்து வருகிறது.

நீ ஜெயம் பெறப் போகிறாய்…இந்தப் பரீட்சையில், இந்த நேர்காணலில், உன் திருமண வாழ்வில், உன் குடும்ப வாழ்வில்.. சவால்கள் எதுவாக இருந்தாலும் சரி, உன் முன் உயர்ந்து நிற்கும் மலை எதுவாக இருந்தாலும் சரி, ஆண்டவர் உன்னைத் தூக்கிச் சுமந்துகொண்டு, தம்முடைய சிறகுகளின் கீழ் உன்னை கூட்டிச் செல்கிறார், மேலும் அவரால் நீ ஜெயம் பெறுவாய்!

நீ மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படிக்கு பரலோகத்தின் தேவன் உன் வாழ்க்கையை செழிப்பாக்கி ஆசீர்வதிப்பார்.

இன்று, உன் சகோதரர், உன் சகோதரி, உன் உடன் பணிபுரிபவர், உன் தபால்காரர் ஆகிய எல்லோருக்கும் ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக இரு. உதாரணமாக, ஒருவரிடம், “என் மீது அக்கறைகொள்வதற்காக நன்றி!” என்று சொல்.

உன் வாழ்க்கையை புத்துணர்ச்சியூட்டும் மழையை உன்னிடமிருந்து மற்றவர்களுக்குப் பாயச் செய்வதன் மூலம் ஒரு தெய்வீக வாய்க்காலாக இரு!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “கர்த்தாவே, ஆம்! நான் இந்த தெய்வீக வாய்க்காலாக இருக்க விரும்புகிறேன்! உம்மால், நான் ஜெயம் பெறுவேன், ஆசீர்வதிக்கப்படுவேன் என்பதை நான் அறிவேன். இன்று நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதைத் தெரிந்துகொள்கிறேன்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!