நீ ஒரு அதிசயம்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ விசேஷித்த நபர், தனித்துவமான நபர் மற்றும் மதிப்புமிக்க நபர். உன் வாழ்க்கை மற்றும் ஜீவன் ஏதோ தற்செயலான ஒன்று அல்ல. ஆண்டவர் உலகை சிருஷ்டிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே உன்னை மனதில் வைத்திருந்தார், மேலும் உன்னை அவருடைய அன்பிற்கு ஆதாரமாக ஆக்கினார்.
“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக” என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. (எபேசியர் 1:4-5)
இதை நீ நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆகவேதான் எங்கள் மின்னஞ்சல்களை ‘நீ ஒரு அதிசயம்!’ என்று எப்போதும் முடிக்கிறோம்.
நேற்று, ஒரு அதிசயத்தின் வரையறை, ‘ஆண்டவர் நம்மிடத்தில் நடப்பிக்கும் ஒரு அசாதாரண மற்றும் போற்றத்தக்க நிகழ்வு’ என்பதை நாம் பார்த்தோம்; இது உனக்கும் பொருந்தும். ஏனென்றால்:
நீ அசாதாரணமானவன்/ அசாதாரணமானவள், உன்னதமானவரின் பிள்ளை! “மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.” – (கலாத்தியர் 4:6-7)
உன்னை வரவேற்கிறோம், நாங்கள் உன்னிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்! இது இருவழிப் பாதை. நீ தயங்காமல் பதிலளிக்கலாம்; ‘அதிசயம் குடும்பத்தில்’ இருந்து நாங்கள் உனக்குப் பதிலளிப்போம்.
ஆண்டவருக்கு அர்ப்பணித்தல்: நீ ஆண்டவருடைய சொந்த சாயலில், பிரமிக்கத்தக்க அதிசயமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய், (ஆதியாகமம் 1:26-28) மற்றும் (சங்கீதம் 139:14) நீ அவரது கரத்தின் கிரியையாக இருக்கிறாய், நீ கிறிஸ்து இயேசுவால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பு (எபேசியர் 2:10)
எங்களுடன் சேர்ந்து அறிக்கையிடுவாயாக: “நான் ஆண்டவரது சாயலில் சிருஷ்டிக்கப்பட்டேன், நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக படைக்கப்பட்டேன், நான் ஆண்டவரது கரத்தின் கிரியை மற்றும் கிறிஸ்து இயேசுவால் உருவாக்கப்பட்ட விசேஷித்த படைப்பு, இனி நான் ஒரு அடிமை அல்ல, நான் உன்னதமான தேவனுடைய பிள்ளை. நான் அவருடைய ராஜ்யத்தின் வாரிசு, நான் உண்மையிலேயே ஒரு அதிசயம்!”