நீ ஏன் உனக்குள் தியங்குகிறாய்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஏன் உனக்குள் தியங்குகிறாய்?

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.” (சங்கீதம் 42:5-6)

ஒருவேளை நீயும் என்னைப்போல் இருக்கலாம்… நாம் அடிக்கடி ஆண்டவரிடம் “ஏன் இப்படி நடந்தது” என்பன போன்ற நிறைய கேள்விகளைக் கேட்கிறோம். உதாரணத்திற்கு:

  • ஏன் இப்படி நடக்கிறது?
  • ஏன் இந்த நோய் வந்தது?
  • ஏன் இந்த துன்பம் நேரிட்டது?
  • ஏன் இந்த சோதனை?
  • ஏன் இந்த தனிமை?

என்று நிறைய கேள்விகளைக் கேட்கிறோம்.

நாம் ஆண்டவரிடம் கேட்பவைகளான முற்றிலும் வெளிப்படையானதும், நேர்மையானதுமான இந்தக் கேள்விகள் நியாயமானவைகள்தான் என்று நான் நினைக்கிறேன். நாம் யாவரும் கஷ்டப்படுகிறோம், எனவே அதற்கான காரணத்தை நாம் அறிய விரும்புகிறோம்.

ஆனால் பெரும்பாலும், ஆண்டவர் நமக்கு அனைத்திற்கும் உரிய பதில்களைத் தருவதில்லை. எனவே கலக்கம் மற்றும் மனச்சோர்வின் வடிவத்தில் நாம் கேள்விகளை மனதில் வைத்திருக்கிறோம்.

தாவீது ராஜாவே இவ்வாறு எழுதினார்: “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.” (சங்கீதம் 43:5)

ஆத்துமா தொய்ந்து, மனச்சோர்வடையும்போது, இந்த உள்ளான மனச்சோர்வு வெளிப்புற விளைவுகளுக்கு வழிவகுக்கிறது: “எனக்கு சந்தோஷமே இல்லை, என் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது, வாழ்ந்து என்ன பயன்?” என்பன போன்ற முறுமுறுப்புகளும் குறைகூறுதலும் நமது வெளிப்புற விளைவுகளாக இருக்கின்றன. ஆனாலும் இதை நீ நினைவில்கொள்: நீ குறைகூறுவதால் உன் பிரச்சனை மறைந்துபோய்விடாது. உண்மை என்னவென்றால், குறைகூறுதல் அந்தப் பிரச்சினையை இன்னும் மோசமாக்குகிறது.

இந்தப் பத்தி என்னை ஊக்குவித்ததுபோல், உன்னையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். இதோ அந்தப் பத்தி: “நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:1-3)

உனது குறைகூறுதலுக்கு ஆண்டவரின் பதில் இதுதான், நிச்சயமாக அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும்! மேலும் வாக்குத்தத்தம் என்ற ஒன்று கூறப்பட்டிருந்தால், அது நிச்சயம் நிறைவேறும். “என் ஆண்டவர் சகலத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நான் குறைகூறுவதை நிறுத்திவிட்டேன்” என்று ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் வாசகரான சாண்டோ என்பவர் எனக்கு எழுதியதுபோல், உன் வாழ்வை ஆண்டவரது கட்டுப்பாட்டில் விட்டுவிடுவாயாக.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!