நீ எல்லாவற்றையும் அவரது கரத்தில் ஒப்புக்கொடுத்துவிடலாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ எல்லாவற்றையும் அவரது கரத்தில் ஒப்புக்கொடுத்துவிடலாம்!

வேதாகமத்தில் உள்ள ஒரு சம்பவம் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறதாய் இருக்கிறது: ஆபிரகாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து தனது சொந்த மகனான ஈசாக்கைப் பலியாகக் கொடுக்க முன்வந்த சம்பவம்தான் அது…

எப்படிப்பட்ட ஒரு சோதனை… எத்தனை ஆச்சரியமான விசுவாசத்தின் அடுத்தகட்டம்!

“மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.” (எபிரேயர் 11:17-19)

இதை நீ எப்போதாவது அனுபவித்திருக்கிறாயா? எப்போதாவது ஆண்டவர், உனக்கு மிகவும் பிரியமான ஒன்றை பலியிடச்சொல்லி உன்னிடத்தில் கேட்டிருக்கிறாரா?

ஆபிரகாமுக்கு, இது மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் ஈசாக்கு அவருடைய ஒரே மகனாகவும், அவருடைய மாம்சத்தின் மாம்சமாகவும், வாக்குப்பண்ணப்பட்டு பிறந்த பிள்ளையாகவும் இருந்தான்… ஆனால் ஆபிரகாம் ஆண்டவரை நம்பினார், ஆண்டவர் சொன்னதை அவர் சரியாகச் செய்தார், ஆகவேதான், கடைசி நிமிடத்தில், ஆண்டவர் வேறு ஒன்றை பலியிடும்படி கொடுத்தார்! இது ஆண்டவருடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை பலியாக ஒப்புக்கொடுத்தலின் அழகிய சித்திரமாகும்.

நீ எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் தேவனிடத்தில் ஒப்படைக்கலாம்: உன் மனதிற்குள் உள்ள விருப்பங்கள், ஒரு குறிப்பிட்ட வேலை, இறுதியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கம் ஆகிய இவை எல்லாவற்றையும் நிறைவேற்றுபவர் ஆண்டவர் ஒருவரே! அவர் ஆபிரகாமைச் சோதித்துப் பார்த்ததைப் போலவே, நீ அவர் மீது வைத்திருக்கும் அன்பையும், அவர் மீது வைத்திருக்கும் உன் விசுவாசத்தையும் ஆண்டவர் சோதித்துப் பார்க்க விரும்புகிறார்.

நீ ஆண்டவரை நம்பு… நீ அன்பின் நிமித்தம் அவருக்காக விட்டுக்கொடுத்த அனைத்தையும் ஆண்டவர் உனக்கு முழுமையாகத் திருப்பிக் கொடுப்பார்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!