நீ ஆண்டவருக்குள் வெற்றிசிறக்கும் ஒருவர்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஆண்டவருக்குள் வெற்றிசிறக்கும் ஒருவர்!

“இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” (வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10)

இயேசு அவருடைய மகிமையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார், அவருடைய வெற்றிக்கு யாரும் போட்டியிட முடியாது. அவர் கம்பீரத்துடனும் மேன்மையுடனும் ஆட்சி செய்கிறார். அவர் போரை வென்றவர், மரணத்தை வென்றவர்! இந்த அறிக்கையின் மூலம் உனக்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்பது இதோ இங்கே:

  • நீ ஒரு வெற்றியாளர்.
  • நீ விடுவிக்கப்பட்டாய். உன் கட்டுகள் உடைந்துவிட்டன.
  • நீ அவருடன் பரலோக ராஜ்யத்தின் உடன் வாரிசு.
  • நீ தன்னம்பிக்கையுடன் நடக்கிறாய்.
  • நீ அவருடைய ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கிராய்.
  • நீ அவருடைய ஆவியின் ஆலயம்.

என் அன்பரே, கிறிஸ்து பாவத்தின் வல்லமையை வென்று நசுக்கியதால், நீ ஒவ்வொரு நாளும் அவருடைய வல்லமையிலும் அளவில்லாத வெற்றியிலும் நடக்கிறாய்!

என்னுடன் அறிக்கையிடு: “இயேசுவே, உன்னில் எனக்கு எல்லாம் இருக்கிறது. நீர் ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் தேவன். உன்னில் நான் ஒரு வெற்றியாளர். உன் ஜீவனால் நிரப்பப்பட்டு தன்னம்பிக்கையுடன் நடப்பேன்! உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!