நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா?

ஆண்டவர் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்பதையும், அவற்றை நிறைவேற்ற உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும் நீ அறிந்திருப்பதால், அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிப்பதற்கும், அவற்றை முழுமையாக சுதந்தரிப்பதற்கும் நீ என்ன செய்ய வேண்டும்?

உன் கருத்துப்படி, ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்வதற்கு நிபந்தனைகள் ஏதேனும் உண்டா?

வேதாகமம் “முன்நிபந்தனைகள்” அல்லது “செயல்படுத்துவதற்கான நிபந்தனைகள்” எதையும் குறிப்பிடவில்லை. உண்மையில், ஆண்டவர் எல்லா மனுஷர்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறவர். அதாவது அவர் பாரபட்சமற்றவர்! அவர் பட்சபாதம் உள்ளவர் அல்லவே; அவர் யாரையும் புறக்கணிப்பதில்லை; அவர் உன்னையும் புறக்கணிக்கமாட்டார்! (ரோமர் 2:11)

இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் அவருடைய வாக்குத்தத்தங்கள் சொந்தமானவை என்று வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது.

“விசுவாச வீரர்கள்/வீராங்கனைகள்” சிலர் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்த சூழ்நிலைகளை வேத வார்த்தை குறிப்பிடுகிறது. உதாரணமாக, சாராளைப் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது:

எபிரெயர் 11:11: “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.”

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களைப் பெற விசுவாசம் அவசியம். நீ வெற்றிவாகை சூட, மிகவும் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்து அதன் மறுபக்கத்தில் உள்ள வெகுமதியைக் காணும் அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

வாக்குத்தத்தம் நிறைவேறத் தாமதிக்கும்போது, நீடிய பொறுமை உனக்கும் உதவும்.

எபிரெயர் 6:15: “அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.”

சில சமயங்களில், வாக்குத்தத்தம் நிறைவேற நீண்ட காலம் நீ காத்திருப்பாய். அக்காலங்களில் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர் மீது உன் விசுவாசத்தை விடாப்பிடியாகவும் விடாமுயற்சியுடனும் வைத்திருப்பது மிகவும் நல்லது.

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் உனக்கானவை; அவை நீ அடையக்கூடிய தூரத்தில்தான் உள்ளன. விட்டுவிடாதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!