நீ அழைக்கப்பட்டுள்ளாய் 📲
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஆண்டவர் உன்னை அழைக்கிறார் என்பது உனக்கு எப்படித் தெரியும்?
சில நேரங்களில் ஆண்டவர் வித்தியாசமான வழிகளில் மக்களை அழைக்கிறார்: மோசேயை பற்றியெரியும் முட்செடியிலிருந்து அழைத்தார் (யாத்திராகமம் 3) தாவீதைப் பார்க்கச் சென்ற தீர்க்கதரிசி (1 சாமுவேல் 16ஆம் அத்தியாயம்) அல்லது மரியாளின் தேவதூதருடனான சந்திப்பு போன்றவை இதற்கான உதாரணங்கள் (லூக்கா 1:26-38). 🤯
என் வாழ்நாளில் ஒருமுறைதான் ஆண்டவரிடமிருந்து இப்படி ஒரு சத்தத்தை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில், அவரது அழைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களைப்போல சத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதில்லை. இது சொப்பனங்கள், விருப்பங்கள், அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகளினால் தோன்றி, வேத வசனங்கள் மற்றும் தீர்க்கதரிசன வார்த்தைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு சமாதானம் மற்றும் ஆர்வத்துடனான உணர்வுடன் உறுதிப்படுத்தப்படுகிறது.
அனுதினமும் அதிசயம் மின்னஞ்சலைத் தொடங்கியதற்கான எங்கள் பயணத்தையும் இது விவரிக்கிறது. பல ஆண்டுகளாக, இசை மூலம் நற்செய்தியைப் பரப்ப உலகம் முழுவதும் பயணம் செய்து, யெஷுவா ஊழியங்கள் மூலம் நாங்கள் ஆண்டவருக்கு பணி செய்து வருகிறோம். இசை நிகழ்ச்சி வடிவில் செய்யும் எங்கள் ஊழியத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு செய்தபோதிலும், சீஷத்துவ ஊழியம் செய்வதற்கான ஆர்வம் எங்களுக்குள் அதிகரித்து வருவதை நாங்கள் உணர்ந்தோம்.
ஆன்லைன் ஊழியத்தின் தேவையையும் அதன் தொடுதலையும் நாங்கள் உணர்ந்தோம். COVID-19 தொற்றுநோய் பரவிய காலங்களில் இது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. இறுதியாக, எங்கள் மகன் ஜாக்(zac) வியாதிப்பட்டபோது எங்கள் சூழ்நிலைகள் மாறியது, மேலும் குறைவாகவே பயணங்கள் செய்தோம்.
நாங்கள் 2024ல் Jesus.net குழுவினரைச் சந்தித்தோம், மேலும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம். ஒவ்வொரு நாளும் jesus.net மற்றும் அனுதினமும் ஒரு அதிசயம் ஊழியத்தின் மூலம் ஆண்டவர் எங்களை ஒரு ஐக்கியத்துக்குள் அழைத்துச் செல்வதை நாங்கள் உணர்ந்தோம். இது நாங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக செய்து வந்த ஊழியத்துடன் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
நாம் இணைந்து ஒரு காரியத்தை செய்வோம். கீழ்கண்டவற்றிக்கு உன் பதில்களைப் பட்டியலிட்டு எழுது: `
- உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய அழைப்பு என்னவென்று நீ நினைக்கிறாய்? உனக்குத் தெரியாவிட்டால், இப்போதைக்கு இடத்தை பூர்த்தி செய்யாமல் காலியாக விடவும்.
- உன் சொப்பனங்கள் (பொழுதுபோக்கு, இசை, பயணம், படிப்பு, குடும்பம், தொழில்) போன்றவை
- உன் திறமைகள்
- பல ஆண்டுகளாக நீ பெற்றுக்கொண்ட தீர்க்கதரிசன வார்த்தைகள்
- உன்னிடம் பேசும் மற்றும் உனக்கு சவாலாகத் தோன்றும் வசனங்களை எழுது.
பட்டியலைப் பார்; இது உன் வாழ்வுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? இது உனக்கு சமாதானத்தையும் உற்சாகத்தையும் தருகிறதா?
நீ பட்டியலில் முதலாவதாக இருப்பதை இன்னும் நிரப்பவில்லை என்றால், பட்டியலை ஆராய்ந்துபார். இப்போது ஆண்டவர் பேசுவதை நீ உணர்கிறாயா அல்லது உன்னை ஒரு திசைக்கு நேராக அது சுட்டிக்காட்டுகிறதா?
உன் அழைப்பைப் புரிந்துகொள்வது என்பதே ஒரு பயணமாகும், அது உடனடியாகக் கிடைக்கும் ஒரு வெளிப்பாடு அல்ல (பொதுவாக). உன் பட்டியல் முழுமையடையவில்லை என்றால், ஆண்டவர் அதை அவருடைய காலத்தில் வெளிப்படுத்துவார் என்று விசுவாசி.
நினைவில்கொள், “உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.” (1 தெசலோனிக்கேயர் 5:24)