நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்களா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, நான் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாம் மற்றவர்களை மன்னிப்பது முக்கியம், ஆனால் நாம் மற்றவர்களை மன்னிக்க முடியும் மற்றும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்கான அவசியம் என்னவென்றால், ஆண்டவர் முதலில் நம்மை மன்னித்தார் என்பதுதான்!
நாம் அவருடைய மன்னிப்பைப் பெற தகுதியுள்ளவர்களாகும்படி, முதலாவது நாம் மன்னிக்க வேண்டும் என்று ஆண்டவர் பலமுறை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்:
- “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத்தேயு 6:14-15)
- “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்.” (லூக்கா 6:37)
- “கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” – (கொலோசெயர் 3:13)
ஏன் அவருடைய மன்னிப்பு உங்களுக்கு தேவை? ஏனென்றால், என்னைப் போலவே நீங்களும் ஒரு பாவிதான் 🫢
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” என்று எழுதப்பட்டுள்ளது. (ரோமர் 3:23) மேலும் நம் அனைவருக்கும் ஆண்டவருடைய மன்னிப்பு தேவையாய் இருக்கிறது. நற்செய்தி என்னவென்றால், நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் விலைக்கிரயம் செலுத்திவிட்டார் என்பதுதான்.
“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.” (எபேசியர் 1:7-8)
எப்படி அவருடைய மன்னிப்பை பெறுவது? மனந்திரும்பி அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (யோவான் 1:9)
நாம் ஜெபிக்கலாமா: ‘இயேசுவே, சிலுவையில் நீர் செய்த தியாகத்திற்கு நன்றி, இன்று நான் மனந்திரும்பி உமது மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், ஆமென்’
நீங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்!
ஆண்டவருடைய மன்னிப்புக்காகக் காத்திருக்கும் வேறு யாராவது உங்கள் நினைவுக்கு வருகிறார்களா? அவர்களுக்கும் இந்த அதிசயத்தை அனுப்பி உதவுங்கள்!
