நாங்கள் உனக்காக ஜெபிக்கலாமா? 🙏🏽

முகப்பு ›› அற்புதங்கள் ›› நாங்கள் உனக்காக ஜெபிக்கலாமா? 🙏🏽

இன்று, நீ எப்படி இருக்கிறாய்? நேற்று, மற்றவர்களுக்கு நீ ஒரு அதிசயம் என்று நாங்கள் எழுதினோம், ஆனால் நீ தனிமையில் இருப்பதாக உணரும்போது, என்ன செய்வாய்? அல்லது ஒரு நண்பருடன் உன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பும்போது என்ன செய்வாய்?

நீ அப்படி உணர்வாயானால், நீ எந்த நேரத்திலும் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்! 🙌🏽

‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்குப் பின்னால், ஜெபம் மற்றும் விண்ணப்பம் மூலம், உன் எல்லா கோரிக்கைகளையும் ஆண்டவரிடம் கொண்டுசெல்ல ஜெப பங்காளர்கள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு நாளும் ஆயத்தமாக உள்ளனர். (பிலிப்பியர் 4:6-7) இந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிப்பதுபோல ஒரு ஜெப விண்ணப்பத்தை அனுப்புவதும் எளிது.

“எனது பிரச்சனைகளைச் சொல்லி நான் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்று நீ நினைக்கலாம், ஆனால் அது ஒரு பொய்; பிசாசு நம்மைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்தும் ஒரு தந்திரம்தான் அது, ஏனென்றால் அவனுக்கு அநேகர் சேர்ந்து ஜெபிக்கும் ஜெபங்களின் வல்லமை என்னவென்று தெரியும். “உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று வேதாகமம் சொல்கிறது. (மத்தேயு 18:19)

மற்றவர்களுக்காக ஜெபிக்கும் மக்களால் வேதாகமம் நிரம்பியுள்ளது: “எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” என்று தீமோத்தேயு கூறுகிறார் – (1 தீமோத்தேயு 2:1) மற்றும் பவுல் எவ்வாறு கொலோசே பட்டணத்தில் உள்ள தனது நண்பர்களுக்காக ஜெபிப்பதை நிறுத்திவிடாமல் இருந்தார் என்பதை இவ்வாறு எழுதுகிறார். “மேலும் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் வேண்டும்” (கொலோசெயர் 1:9)

குறிப்பாக எங்கள் மகன் ஜாக்(zac) மருத்துவமனையில் இருந்தபோது, எங்களுக்காக ஜெபிக்கும் மக்கள் கூட்டத்தைக் கொண்டிருந்ததன் ஆசீர்வாதத்தை நாங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறோம். எங்கள் மகனின் உயிருக்காக பரிந்துபேசிய, உலகெங்கிலும் உள்ள பல விசுவாசிகளின் ஜெபங்களால் நாங்கள் உதவி பெற்றோம்.

“நீ மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இயேசுவைப்போல் இருப்பாய்” என்று மேக்ஸ் லுகாடோ எழுதுகிறார்.

சரி, நாங்கள் இயேசுவைப்போல இருக்க விரும்புகிறோம்; எனவே, நாங்கள் உனக்காக ஜெபிக்க விரும்புகிறோம்! தயவு செய்து உன் ஜெப விண்ணப்பத்தை (விண்ணப்பங்களை) இன்றே எங்களுக்கு அனுப்பு, அப்போது எங்களால் உன்னுடன் சேர்ந்து ஜெபிக்க முடியும்!

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!