நம் ஆண்டவர் நித்திய கன்மலையாய் இருக்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நம் ஆண்டவர் நித்திய கன்மலையாய் இருக்கிறார்

மரங்கள் மிக நீண்ட காலம் வாழக்கூடியவை. நாம் இவ்வுலகைவிட்டுக் கடந்துபோய்விடுவோம், ஆனால் மரங்கள் பெரும்பாலும் நீடித்து வாழ்கின்றன.

அமெரிக்காவில் உள்ள பழமையான ஒரு மரம் கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகள் பழமையானது என்பது உனக்குத் தெரியுமா? கலிபோர்னியாவின் வெள்ளை மலைகளில் காணப்படும் இது “மெதுசெலா” என்று மிகப் பொருத்தமான பெயரால் அழைக்கப்படுகிறது. இது எவ்வளவு நீண்ட ஆயுளை உடையதாய் இருக்கிறது பாருங்கள்!

இந்த வகையான மரம் விலைமதிப்புமிக்கது… இந்த மரங்களுக்கு அருகில் நிற்கும் தருணத்தை, ​​நீ சற்று கற்பனை செய்து பார். அவைகள் குட்டன்பெர்க், சார்ல்மேக்ன், இயேசு ஆகியோரின் காலங்களிலும், அதற்கு முன்னரும் கூட உயிருடன் இருந்திருக்கின்றன!

வேதாகமத்தில் ஆண்டவருக்கான அநேக நாமங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன… அவற்றுள் நித்திய கன்மலை என்பதும் ஒரு நாமமாகும். “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள் (உறுதியாக நம்புங்கள்); கர்த்தராகிய யேகோவா (அவர் உன் கோட்டை, உன் கேடயம், உன் இரட்சண்ய கொம்பு) நித்திய கன்மலையாயிருக்கிறார் (நித்திய கன்மலை).” (ஏசாயா 26:4)

உனக்குத் தெரிந்திருக்கிறபடி, ஆண்டவர் என்றென்றைக்கும் இருந்திருக்கிறார், அவர் எப்போதும் இருப்பார். அவர் காலத்தின் துவக்கத்திலிருந்தே அதரிசனமானவரும், காலங்களுக்கு அப்பாற்பட்டவரும், நித்தியமானவருமாய் இருக்கிறார்.

இப்படிப்பட்ட நித்திய கன்மலையான ஒருவர் உன் ஜீவனைத் தம்முடைய உள்ளங்கையில் வைத்துப் பாதுகாக்கும்போது நீ எதற்காக பயப்பட வேண்டும்? நீ அவரைச் சார்ந்து இருக்கலாம், அவர் ஸ்திரமானவர், நித்தியமானவர், உன்னை மேற்கொள்ளும் அல்லது உனக்கு நெருக்கடி தரும் எதையும் உன்னைவிட்டு விலக்கும் அளவுக்கு வல்லமையானவர்.

“உம்மைப்போல யாருண்டு நன்மை செய்ய நீர் உண்டு …” என்ற இந்த உற்சாகமூட்டும் பாடலை நாம் கேட்போம். நம்மை உற்சாகப்படுத்தும் இந்தப் பாடலைக் கேட்டு இன்றே மகிழ்வோம். https://youtu.be/7sa6YEoWsec?si=N8-732XRWo_3rMFP

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்திகளானது நான் ஆண்டவருடன் சரியான தொடர்பில் இருக்க எனக்குப் பெரிதும் உதவியது. தினமும் காலையில் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் வாசிக்கும் ஒவ்வொரு கட்டுரையும் என் தெய்வீகமான ஆண்டவர் மீதான என் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை பலப்படுத்துகிறது! எரிக் ‘அனுதினமும் ஒரு அதிசயத்திற்கு’ மனதார நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது ஆண்டவருடன் மிகவும் வலுவான உறவைக் கொண்டிருக்கிறேன்… நான் பல சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்பு நான் சந்தித்தது மிகவும் கடினமானது (ஒரு உறவின் பிரிதல்). ஆண்டவர் நிச்சயமாக என்மீது கிருபையையும் அன்பையும் காட்டியுள்ளார். அவர் என் ஆதரவாளர், என் ஆறுதல் மற்றும் என் கன்மலை!… எரிக், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ ஊழியத்திற்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்! ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொடுப்பாராக.” (மரியா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!