நன்றி சொல்லும் மனப்பான்மையைக் கொண்டிரு! 🙌
முகப்பு ›› அற்புதங்கள் ››
“கர்த்தருடன் நெருங்கி ஜீவித்தல் மற்றும் அவரில் வளர்ச்சியடைதல்” என்ற நமது சிறப்புத் தொடரை நாம் தொடர்ந்து தியானிப்போம்.
கர்த்தராகிய இயேசுவோடு நம் உறவை வளர்த்துக்கொள்ளும்படி வேதாகமம் பலமுறை நமக்கு அறிவுறுத்துகிறது. எனவே, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல… அவருடன் நெருங்கி ஜீவிப்பதுமாகும்; மேலும் அவருடைய வார்த்தையில் வேரூன்றி, அவருடைய சத்தியத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதாகும். நீ நன்றியறிதல் உள்ள நபராக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் கூறுகிறார்.
“ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.” (கொலோசெயர் 2:6-7)
இதற்கு முன்பும், இப்போதும் மற்றும் இனி வரவிருக்கும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியாய் இருப்பது ஆண்டவருடைய அன்பில் வேரூன்றி நிலைத்திருக்க உனக்கு உதவும். அவருடைய நன்மைகளைக் காணும்படி நீ கண்களைத் திறந்து பார்க்கையில், சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரது கிரியையை நீ காண முடியும்:
- உன் வீட்டு ஜன்னல்கள் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் வீசுவது,
- சூரிய அஸ்தமனத்தின்போது காணப்படும் வண்ண வண்ண நிறங்கள்.
- குழந்தைகளின் நகைச்சுவைப் பேச்சு மற்றும் சிரிப்பு,
இயேசு அப்பத்தை ஆசீர்வதித்து பெருக்கச் செய்ததற்கு முன்பு, ஆண்டவருக்கு நன்றி சொன்னதுபோல, நீயும் எப்படி நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தால் உனக்கும் அற்புதம் நடக்கும்.
நன்றி சொல்லும் மனப்பான்மையை நீ வளர்த்துக்கொள்வது, உன்னை ஆண்டவருடைய இருதயத்திற்கு நெருக்கமாக அழைத்து வருவதோடு, அவருடைய அன்பையும் கிருபையையும் எண்ணி அவரை மனதாரத் துதிக்க உதவும்.
இன்று, இதோ உனக்கான எனது சவால்: ஒரு குறிப்பேட்டையோ அல்லது உன் ஸ்மார்ட்ஃபோனையோ எடுத்து, நீ உன் வாழ்வில் நன்றி சொல்ல விரும்பும் 10 விஷயங்களை எழுதி, அதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்து!