தேவன் உன்னை நேசிக்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவன் உன்னை நேசிக்கிறார்

“தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” (வேதாகமத்தில் 1 யோவான் 4:16ஐப் பார்க்கவும்)

இன்று காலை நேரத்தில் சூரியன் உதித்து பூமியைத் தன் வெளிச்சத்தால் சூழ்ந்துகொண்டது. அதன் உஷ்ணத்தைத் தழுவ மலர்கள் விரிந்தன. பறவைகள் தங்கள் பாடல்களால் விடியலை வரவேற்றன. “வெளிச்சம் உண்டாகட்டும்!” என்று சொன்னவரின் சத்தத்தால் சகல சிருஷ்டிகளும் இயக்கத்திற்கு வந்தன… அது ஒரு பழங்கால கட்டளையாகும். அவை எல்லாமுமாக இருப்பவரும், சகலத்தையும் செய்யக்கூடியவருமாய் இருப்பவரின் வாயிலிருந்து பிறந்த ஒரு சில வார்த்தைகளேயாகும்.

இன்றும், உன் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், உன் இருதயத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வெளிச்சம் ஊடுருவிச்செல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பலத்தோடும் விசுவாசத்தோடும் எழும்பு! இந்த நித்தியமான, மாறாத சத்தியத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்… தேவன் மாறாதவராய் இருக்கிறார். அவரது அன்பு மாறாதது. அது மாறியது என்று நீ கேள்விப்பட்டிருக்கவோ வாசித்திருக்கவோ மாட்டாய்… தேவன் உன்னை நேசிக்கிறார்!

  • உன் இருதயம் துக்கத்தால் நிறைந்து நீ அழும்போது, அவர் உன் கண்ணீரைத் தம்முடைய துருத்தியில் சேகரித்து வைக்கிறார்.
  • நீ ஜெயங்கொள்ளும்போதும், களத்தில் வெற்றிபெறும்போதும் அவர் மகிழ்ச்சியடைகிறார்.
  • அவர் ஒவ்வொரு நிமிடமும் உன்னைக் காத்து நடத்துகிறார்.
  • உன் சொந்த திறமைகளை நீ சந்தேகிக்கும்போது கூட, அவர் உன்னை நம்புகிறார்.

அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார்.

தேவன் உன்னை நேசிக்கிறார், இந்த அன்பின் கதையை நித்திய ராஜ்யத்தின் மகத்துவத்துடன் மட்டுமே ஒப்பிட முடியும்.

என்னுடன் சேர்ந்து தேவனைத் துதித்து ஜெபி: “கர்த்தாவே, நீர் என்னை நித்திய அன்பினால் நேசிக்கிறீர் என்பதை அறிவேன். நீர் என்னை மனதார நேசிக்கிறீர். உமக்கு நன்றி, கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!