தேவனுடைய உதவியால், நீ இந்த மதிலைத் தாண்டுவாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனுடைய உதவியால், நீ இந்த மதிலைத் தாண்டுவாய்!

இன்று இந்த வசனம் என்னுடன் பேசுகிறது, அது உன்னையும் தொடும் என்று நம்புகிறேன்…
“உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.” (வேதாகமத்தில் 2 சாமுவேல் 22:30ஐப் பார்க்கவும்)

தாவீது, தான் சொல்வது என்ன என்பதை நன்கு அறிந்தவனாய் இருந்தான், உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் என்று அவன் சொன்னபோது… உண்மையிலேயே அவன் அதை வாழ்ந்து காட்டினான்!

சகல சத்துருக்களிடமிருந்தும் தன்னை விடுவித்த பிறகு, அவன் இந்தப் பாடலின் வார்த்தைகளைக் கர்த்தரிடத்தில் பேசினான் என்று வேதாகமம் சொல்கிறது (வேதாகமத்தில் 2 சாமுவேல் 22:1 ஐப் பார்க்கவும்)

தாவீது தாண்ட வேண்டிய மதில்கள் நிஜத்தில் சுவர்களாகவே இருந்தன. இருப்பினும், உன் வாழ்விலும் குறிப்பிட்டு பெயர் சொல்லத்தக்க சில மதில்கள் இருக்கக் கூடும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை, அது உனக்கு…

  • ஊக்கமின்மை என்ற மதிலா?
  • அல்லது சந்தேகத்தின் மதிலா?
  • வெறுப்பு, மனகசப்பு எனும் மதிலா?
  • தனிமை எனும் மதிலா?
  • வியாதி எனும் மதிலா?
  • மனச்சோர்வு எனும் மதிலா?
  • பயம் எனும் மதிலா?
  • மனக்கவலை எனும் மதிலா?
  • உதவியற்ற நிலைமை எனும் மதிலா?
  • சோர்வு எனும் மதிலா?
  • பயங்கரமான மன உளைச்சல் எனும் மதிலா?

நீ இப்போது எதிர்கொண்டிருக்கும் மதிலானது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, உன்னால் அதைத் தாண்டிச் செல்ல முடியும் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்!

நீ அதைத் தாண்டிச் செல்லப் போகிறாய், ஏனென்றால் இயேசு உன்னைச் சுமந்து செல்பவராய் இருக்கிறார்!
உன் சத்துருக்களிடமிருந்து உன்னை விடுவிப்பவர் அவர்தான். உன்னைத் தூக்கி சுமந்துகொண்டு உன் சார்பாக நடப்பவரும் அவர்தான்.

ஆம், உன் தேவனுடைய உதவியால் நீ இந்த மதிலைத் தாண்டுவாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!